Thursday, November 7, 2013

ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை


 

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில், தன் ஐபோன் 5சி விலை ரூ. 41,900 என உறுதிப்படுத்தியுள்ளது. இது 16ஜிபி வகைக்கான விலையாகும். 32 ஜிபி வகை ரூ.53,500 என விலையிடப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல், இந்த போன் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில், நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படாத ஐபோன் 5சி விலை 549 டாலராகும். இன்றைய அந்நியச் செலவாணி மதிப்பில், இதன் இந்திய மதிப்பு ரூ.32,940 என்ற அளவில் தான் இருக்கும். ஆனால், ரூ.36,000 எனக் குறிக்கப்பட்டிருப்பது ஏன் எனத் தெரியவில்லை. வரி சேர்த்தாலும் இது ரூ.40,000 ஐத் தாண்டாது.
ஊதா, பச்சை, இளஞ்சிகப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணங்களில் 5சி வெளி வருகிறது. இதற்கான கவசம் இதே வண்ணங்களில் கிடைக்கிறது. விலை ரூ. 2,300. ஐபோன் 5 எஸ் விலை, வரியுடன் சேர்த்து, ரூ.53,500 என 16ஜிபி மாடலுக்கு விலையிடப்பட்டுள்ளது. 32 ஜிபி மாடல் ரூ.62,500 மற்றும் 64 ஜிபி மாடல் ரூ.71,500 என விலை குறிக்கப்பட்டுள்ளது.இதற்கான தோலில் செய்த கவசம் ரூ.3,200க்குக் கிடைக்கிறது. ஐபோன் 4எஸ், 8ஜிபி மாடல் தற்போது ரூ. 31,500 என விலையிடப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் ஆர் காம் நிறுவனங்கள், தாங்கள் ஐபோன்களை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன.

No comments:

Post a Comment