Thursday, June 18, 2015

மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் பயர் 3



இதில் 4.5 அங்குல அகலத்தில், 540 x 960 பிக்ஸெல் திறனுடன் திரை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் (MediaTek (MT6582M)) 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட்.
இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் பின்புறக் கேமரா 5 எம்.பி. திறனுடன், எல்.இ.டி. ப்ளாஷ் துணையுடன் இயங்குகிறது. முன்புற வெப் கேமரா 2 எம்.பி. திறனுடன் உள்ளது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் போனில் அக்ஸிலரோமீட்டர், லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற நவீன வசதிகள் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, ஜி.பி.ஆர்.எஸ். ஏ-ஜிபிஎஸ்., வை பி, மைக்ரோ யு.எஸ்.பி மற்றும் புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பேட்டரி 1850 mAh திறன் கோன்டது. ஏழு மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 180 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இதனுடன் M! Live, M! Games, Opera , Swift key, Hike, Clean Master, Games Club, M! Insurance, M! Security, Snapdeal, Truecaller, and Reverie apps ஆகிய அப்ளிகேஷன்கள் பதிந்து தரப்படுகின்றன.
இதே நேரத்தில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் 4ஜி எல்.டி.இ. கான்வாஸ் நைட் 2 ஸ்மார்ட் போனை ரூ.16,299 என்று விலையிட்டு அறிமுகப்படுத்தியது. இதில் HD AMOLED டிஸ்பிளே கொண்ட 5 அங்குல திரை உள்ளது. 64 பிட் இயக்கத்தில் இயங்கும் Snapdragon 615 Octa Core ப்ராசசர் இயங்குகிறது.
இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5. பின்புறத்தில் 13 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 5 எம்.பி. திறன் உள்ள கேமராவும் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 2,260 mAh திறன் கொண்டது.

தன் இணைய தளத்தில், அண்மையில், ரூ. 6,499 விலை எனக் குறிப்பிட்டு, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன்னுடைய புதிய மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் பயர் 3 ஸ்மார்ட் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதே விலைக்கு மற்ற மொபைல் போன் 
விற்பனை மையங்களிலும் இது விற்பனையில் உள்ளது.

Thursday, June 11, 2015

ரூ.1,920 கோடி சம்பளம் வாங்கும் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேவெதர்; போர்ப்ஸ் இதழ் தகவல்

வாஷிங்டன்,

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பிளாயிடு மேவெதர் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 3-வது தடவையாக மேவெதர் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

புதிய பட்டியலில் விளையாட்டு வீரர்களின் சம்பளம் மட்டுமில்லாது போனஸ், பரிசுத்தொகை, போட்டியில் பங்கேற்பதற்கான கட்டணங்கள் மற்றும் கடைசியாக 12 மாதங்களில் பெற்ற வருமானங்கள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் டாப்-10 பட்டியல் பின்வருமாறு:-

1. பிளாயிடு மேவெதர், குத்துச்சண்டை வீரர், அமெரிக்கா (ரூ.1,920 கோடி)
2.மேனி பாக்கிவோ, குத்துச்சண்டை வீரர், பிலிப்பைன்ஸ் (ரூ.1,024 கோடி)
3.கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து, போர்ச்சுகல் (ரூ.509.44 கோடி)
4.லயனல் மெஸ்ஸி, கால்பந்து, அர்ஜெண்டினா (ரூ.472.32 கோடி)
5.ரோஜர் பெடரர், டென்னிஸ், சுவிட்சர்லாந்து (ரூ.428.8 கோடி)
6.லீபிரான் ஜேம்ஸ், கூடைப்பந்து, அமெரிக்கா (ரூ.414.72 கோடி)
7.கெவின் துராந்த், கூடைப்பந்து, அமெரிக்கா (ரூ.346.24 கோடி)
8.பில் மைக்கேல்சன், கோல்ப், அமெரிக்கா (ரூ.325.12 கோடி)
9.டைகர் உட்ஸ், கோல்ப் வீரர், அமெரிக்கா (ரூ.323.84 கோடி)
10.கோப் பிரயண்ட், கூடைப்பந்து, அமெரிக்கா (ரூ.316.8 கோடி)