Sunday, January 19, 2014
(ஜி.எம். உணவுகள்) உங்கள் தட்டில் உணவா... விஷமா?
இத்தனை அத்தியாயங்களாக நான் சொல்லி வந்த அத்தனை விஷயங்களையும் நீங்கள் தொடர்ந்து உள்வாங்கியவர் என்றால், 'நாம் உண்ணுவதெல்லாம் உணவல்ல, விஷம்' என்பதை ஓரளவுக்கு உணர்ந்திருக்க முடியும். இப்போது, ஒரேயடியாக அதை உணர்த்தும் வகையில் வந்து கொண்டிருப்பவைதான்... மரபணு மாற்றப்பட்ட உணவுகள் (ஜி.எம். உணவுகள்). மனித இனத்தின் எதிர்காலத்தையே பெரும் கேள்விக்குறியாக்கும் புதிய பூதாகார பிரச்னை இது என்றால், பொய்யில்லை!
மேலோட்டமாக பார்க்கும்போது... 'மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது அறிவியலின் புதிய கண்டுபிடிப்பு. இது நல்ல விஷயம்தானே.. இதற்கு ஏன் எதிர்ப்பு?' என்று கேட்கத் தோன்றும்.
இதற்கு விடை மிகவும் சுலபம். ஒவ்வொரு விஷயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. அணுசக்தியால் மின்சாரமும் தயாரிக்கலாம், அணுகுண்டும் தயாரிக்கலாம். மரபணு மாற்றமும் அப்படியே. 'இந்த விஞ்ஞான யுக்தியை தாவரங்களுக்குப் பயன்படுத்தினால்... உணவு உற்பத்தியை பல மடங்கு பெருக்கலாம், புது வகையான தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்யலாம், பூச்சிகள் தாக்குதல் இல்லாமல் அமோக வளர்ச்சி, கெட்டுப்போகாத - அழுகிப்போகாத தன்மை, நல்ல நிறம், நல்ல சைஸ் போன்ற குணங்களோடு உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்யலாம்' என்கிற கற்பனையில் மரபணு விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்றார்கள். அவர்கள் நினைத்தபடியே இது நடந்திருந்தால், இது ஒன்றும் அப்படி கெட்ட விஷயமாக இருந்திருக்காது. ஆனால், 'பிள்ளையார் பிடிக்க, குரங்காக முடிந்த கதை' என்பது போல அது மாறியிருப்பதுதான் சோகம்.
'இந்தப் பருத்திச் செடியின் இலைகளைத் தின்ற கால்நடைகள் இறக்கின்றன; பருத்திக் காடுகளில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு உடலில் அரிப்பு, தும்மல், இருமல், ஆஸ்துமா ஏற்படுகிறது...' என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் கிளம்பின.
இந்தச் சலசலப்பு வேகமாகப் பரவவே... 'மரபணு மாற்று தொழில்நுட்பம் பாதுகாப்பானதா?' என்று ஆராய்ச்சி செய்து அறிக்கை தரும்படி 1996-ல் ஒரு குழுவை அமைத்தது இங்கிலாந்து அரசு! உலகின் தலைசிறந்த மரபணு விஞ்ஞானி புஜ்டாய், இதன் தலைமை ஏற்றார். ஆராய்ச்சியின் முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தன.
மரபணு மாற்ற முறையில் விளைந்த உருளைக்கிழங்கு, எலிகளுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டது. 90 நாட்களில் எலிகளின் உடலில் பல மாறுதல்கள் தோன்றின. முக்கியமாக குடலில் உள்ள செல்கள் நீண்டும், மெலிந்தும் வளர்ந்தன. இது புற்றுநோயின் முதல் கட்டம். இதே போன்ற மாற்றங்கள் மூளை, ஈரல், சிறுநீரகம், ஆண் விந்துப்பை, பெண் சினை முட்டைப்பை போன்ற உறுப்புகளிலும் ஏற்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் லண்டனின் புகழ்பெற்ற 'லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. உலகமே ஸ்தம்பித்தது.
மரபணு மாற்ற விதைகளை உற்பத்தி செய்து, உலகெங்கும் விற்று கோடிகளில் புரளலாம் என்று கற்பனை செய்திருந்த கம்பெனிக்கு இது பேரிடியாக விழுந்தது. அடுத்தடுத்து என்ன நடந்ததோ... அடுத்த வாரமே 'லான்செட்’ இதழ், தன் கட்டுரையை வாபஸ் பெற்றது. 'ரோவட்’ நிறுவனம், தன்னிடம் 36 வருடம் ஆராய்ச்சி பணிபுரிந்த விஞ்ஞானி புஜ்டாயை டிஸ்மிஸ் செய்தது. அவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கம்போல, 'மரபணு மாற்றப்பட்ட உணவு மிகவும் பாதுகாப்பான அற்புத உணவு' என்று 'ஆராய்ச்சி’க் கட்டுரைகளை வெளியிட ஆறு 'விஞ்ஞானிகள்’ புறப்பட்டு வந்தனர்.
மரபணு மாற்றப்பட்ட அரிசி, கோதுமை, சோயா, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்திரிக்காய், வாழைப்பழம், எண்ணெய் வித்துக்கள் என்று ஏகமாக உலகெங்கும் வியாபித்துவிட்டன. இப்போது, சராசரி அமெரிக்கனின் உணவில் 75% உணவுகள், மரபணு மாற்றப்பட்ட உணவுதான் என்கிறது ஒரு கணக்கீடு. அமெரிக்கர்கள் பெரிய கொடைவள்ளல் போல ஜி.எம். உணவுகளை, வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தானம் செய்தார்கள். ஆனால்... ஸாம்பியா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் போன்ற நாடுகள், 'செத்தாலும் பரவாயில்லை - எங்களுக்கு வேண்டவே வேண்டாம்!’ என்று மறுத்துவிட்டன.
ஒவ்வொரு நாட்டிலும் மந்திரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கோடி கோடியாகப் பணம் இறைக்கப்பட்டது. நம் நாடு? பல்வேறு தரப்பிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு அலையால், மரபணு மாற்ற உணவுப் பயிர்களுக்கு தடை விதித்தது. ஆனால், வெறும் கண்துடைப்புதான். இப்போது பழங்கள், சோளம் என்று மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் பலவும் இந்திய கடைகளிலேயே தாராளமாகக் கிடைக்கின்றன.
ஆக, திருட்டுத்தனமாக கொல்லைப்புற வழியாக மரபணு மாற்ற உணவுகளும் பயிர்களும் நம் நாட்டில் நுழைந்துவிட்டன என்பதுதான் உண்மை.
ஜி.எம். உணவுகளால் என்னென்ன கெடுதல்கள் வரலாம்? ஒரு குறிப்பிட்ட பூச்சியைக் கொல்வதற்காகத் தயாரிக்கப்பட்ட ஜி.எம். விதைகள், பல புதிய பூச்சிகளை / கிருமிகளை / வைரஸ்களை உருவாக்கலாம். புதிய டி.என்.ஏ உருவாவதால்... அலர்ஜி சம்பந்தமான பாதிப்புகள் வரலாம். குடல், ஈரல், மற்ற உறுப்புகளில் எல்லாம் புற்றுநோய் வரலாம். உடலின் நோய் எதிர்ப்புசக்தி அழிக்கப்படலாம்.
'ஒரு புதிய மருந்து கண்டுபிடித்தால், அதை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, விலங்குகளுக்குக் கொடுத்து ஆராய்ந்து, பிறகு மனிதர்களின் 'புரிந்துணர்வு ஒப்புதலோடு’ பரிசோதனை மேற்கொண்ட பிறகே... சந்தைப்படுத்தப்படும். ஆனால், நம் யாருடைய சம்மதமும் பெறாமலேயே, நம்மை லேபரேட்டரி எலிகளைப்போல் பாவித்து இந்த ஜி.எம். உணவுகளை உண்ணச் செய்வது என்ன நியாயம்..?
'மரபணு விஞ்ஞானம் இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது. இதைப் பற்றிய ஏராளமான விஷயங்கள் நமக்கு இன்னும் புரியவில்லை’ என்கிறார்கள் மனித இனத்தில் அக்கறையுள்ள விஞ்ஞானிகள். ஆனால், இந்த எச்சரிக்கைகள் யார் காதிலும் விழவில்லை.
ஒவ்வொரு முறையும் அமெரிக்காவின் மான்சான்டோ கம்பெனியிடம் கையேந்தி விதை வாங்கும் அவலம் உண்டாகும். இந்தியா வெகு விரைவில் விவசாயத்தில் அமெரிக்காவுக்கு அடிமை நாடாக மாறும் என்பதெல்லாம் நிஜம்தான். அதுசரி, பூனைக்கு மணி கட்டுவது யார்? விஞ்ஞானிகள், டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் எல்லோரும் சேர்ந்து சமுதாய விழிப்பு உணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும்.
இம்மாதிரி போராட்டங்களை வாழ்நாள் முழுவதும் தலைமை ஏற்று நடத்திய இயற்கை விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வார் (என்னை இந்தத் துறையில் ஆர்வம்கொள்ள வைத்தவர்!), சில நாட்களுக்கு முன் இயற்கை எய்தியது, நாட்டுக்கே பேரிழப்பு. ஆனாலும், அவரின் பணியை தொடர்வதற்கு, பலர் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்கு நிம்மதி.
What is App Lock? ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள்!
|
ஆப் லாக் அப்ளிகேஷனை உலகம் முழுக்க 30 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆண்ட்ராய்டு தொழில் நுட்பம்கொண்ட ஸ்மார்ட் போன்களை சிறப்பாகப் பயன்படுத்த பல ஆப்ஸ்கள் உள்ளன. இணையதளத்தில் உலாவ, கோப்புகளைச் சேகரித்து வைக்க, புகைப்படம் எடுக்க என பலவிதமான செயல்பாடுகளுக்கும் ஆப்ஸ்கள் நிறைய உதவுகின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆப்ஸை இப்போது பார்ப்போம்.
இந்த அப்ளிகேஷன் மொபைல் போன்களில் உள்ள எஸ்.எம்.எஸ் (குறுஞ்செய்தி), கான்டக்ட்ஸ் (மொபைல் எண்கள்), ஜீ-மெயில், ஃபேஸ்புக், கேலரி (புகைப்படக் கோப்பு), மெயில்கள் (தனிப்பட்டவை மற்றும் அலுவலகம் சார்ந்தவையாககூட இருக்கலாம்!) போன்ற ஸ்மார்ட்போன் உரிமையாளரின் தனிப்பட்ட விஷயங்களை மற்ற யாரும் தெரிந்துகொள்ளாதபடி பாதுகாக்கப் பயன்படுகிறது.
இந்த அப்ளிகேஷன் மூலம் ஒருவர் மொபைல் போனில் தனக்கு மட்டுமே தெரியவேண்டும் என்கிற விஷயங்களை பாஸ்வேர்டு போட்டு பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். தங்களுக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்டு மற்றவர்களுக்குத் தெரியாதபட்சத்தில் மொபைல் போனில் இருக்கும் தகவல்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இருக்காது. இதனால் நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று பயப்படத் தேவையில்லை.
அதுபோல, வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை எடுத்து விளையாடும்போது செட்டிங்ஸ்களை மாற்றிவிடுவார்களோ என்கிற பயமும் வேண்டாம். இந்த அப்ளிகேஷன்கள் பல பெயர்களில் கிடைக்கின்றன. அவற்றில் சில, ஃபாஸ்ட் ஆப் லாக் (Fast App lock), ஆப் லாக் மாஸ்டர் (Applock Master).
இந்த அப்ளிகேஷனை உலகம் முழுக்க 30 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
24 மொழிகளில் இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.
|
ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம்... New ATM Transaction Carges
ஏடிஎம் குறித்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தால், டெக்னாலஜி வந்தும் அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாத நிலை உருவாகும்.
இனிமேல் நீங்கள் நினைத்த நேரத்திலெல்லாம் ஏடிஎம்-க்குப் போய்ப் பணத்தை எடுக்க முடியாது. ஒரு மாதத்தில் ஐந்து முறைக்குமேல் நீங்கள் ஏடிஎம்-ல் பணம் எடுத்தால், அதற்குத் தனியாகப் பணம் கட்டவேண்டும். இப்படிச் செய்தால்தான் வங்கிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என மத்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன இந்தியா முழுக்க உள்ள பல வங்கிகள்.
தற்போது எல்லா வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தனது ஏடிஎம் மூலம் எத்தனைமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கு ஐந்துமுறை மட்டும் இலவசமான பணப் பரிவர்த்தனை (பணம் எடுப்பதல்லாத செயல்பாடுகள் உள்பட) செய்யலாம் என்றும், அதற்குமேல் செய்தால் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தையும் வசூலித்து வந்தன. பணம் எடுக்க சுமார் 17 ரூபாயும் (வங்கிக்கு வங்கி இந்தக் கட்டணம் வித்தியாசப்படும்), பேலன்ஸ் தொகையைச் சோதித்தறிய சுமார் 6 ரூபாயும் கட்டணம் வசூலித்தன வங்கிகள்.
இந்த நடைமுறையை மாற்றி, இனி எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் அவர் ஐந்துமுறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். ஆறாவது முறை பணப் பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் சுமார் 18 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற புதிய நடைமுறையைக் கொண்டுவருவதில் எல்லா வங்கிகளும் தீவிரமாக இருக்கின்றன.
நஷ்டத்தில் இயங்குகின்றன!
//''ஏடிஎம் இயந்திரங்களைப் பாதுகாக்க, பராமரிக்க அதிகம் செலவாகிறது. பெங்களூரு ஏடிஎம்-ல் பெண் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இன்னும் கூடுதல் கவனத்தை ஏடிஎம் மையங்களின் மீது வங்கிகள் செலுத்தவேண்டி இருக்கிறது. இந்தியா முழுக்க உள்ள ஒரு லட்சம் ஏடிஎம் மையங்களைப் பராமரிக்க நான்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் சில ஏடிஎம்-கள் மூலம் நாள் ஒன்றுக்கு ஐந்து பணப் பரிவர்த்தனைகள் நடப்பதே அரிதாக இருக்கிறது. இதனால் வங்கிகள் பெரிய அளவில் நஷ்டப்படுகின்றன''//
Monday, January 13, 2014
மார்டின் லூதர் கிங் - சுவாமி விவேகானந்தர் -மொஸார்ட், martin Luther king, Vivekanandar, Mozart
அமெரிக்காவில் அடிமை முறை மற்றும் நிறவெறிக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்தவர் ஆபிரகாம் லிங்கன். அவரைப் போலவே நிற வெறிக்கு எதிராக மீண்டும் குரல் கொடுத்தவர் மார்டின் லூதர் கிங். தாங்கள் கடைப்பிடித்த கொள்கைகளுக்காகச் சுட்டுக் கொல்லப்பட்டனர் இருவரும்.
1929 ஜனவரி 15. அமெரிக்காவில் பிறந்த மார்டின் லூதர் கிங் சமூக உரிமைப் போராளி, ஆப்பிரிக்க- அமெரிக்க மனித உரிமைத் தலைவர் என்று பன்முகம் கொண்டவர். அவர் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவின் தென் மாகாணங்களில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க இன மக்கள் தெருக்களில் நடக்கக்கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பேருந்துகளிலும் ரயில்களிலும் ஒதுக்கப்பட்ட தனி இடத்தில்தான் பயணிக்க வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை இல்லை. தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.
1955ல் அலபாமா மாகாணம் மாண்ட்கோமரி என்ற ஊரில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த ரோசா பார்க்ஸை, அமெரிக்கர்களுக்கு இடம் அளிக்கும்படி கேட்டனர். தான் பயணச் சீட்டு வாங்கியிருப்பதாகச் சொல்லி, ரோசா பார்க்ஸ் இருக்கையை விட்டு எழ மறுத்தார். உடனே அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்தக் கொடுமைக்கு எதிராக கறுப்பின மக்களை ஒன்று திரட்டிய மார்டின் லூதர் கிங், ‘பேருந்துப் புறக்கணிப்புப் போராட்டத்தை’ வெற்றிகரமாக நடத்தினார். அரசு வேறு வழியின்றிப் பேருந்தில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்களுக்குத் தனி இருக்கை என்ற சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
மகாத்மா காந்தியின் வன்முறையற்ற போராட்டம் மார்டின் லூதர் கிங்கைப் பெரிதும் ஈர்க்கவே, அவரும் அதே அறவழியைப் பின்பற்றினார். அமெரிக்கர் மீது பகைமை பாராட்டாமல் அதே நேரம் ஆப்பிரிக்கர்களின் உரிமைகளையும் விட்டுக் கொடுக்காமல் பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் என அமைதியாகப் போராடினார். ‘கறுப்பின மக்களின் காந்தி’ என்று உலகம் முழுவதும் மார்டின் லூதர் கிங் புகழ் பெற்றார்.
‘எனக்கொரு கனவு உண்டு’ என்ற தலைப்பில் மார்டின் லூதர் கிங் 1963 ஆகஸ்ட் 27ம் தேதி வாஷிங் டனில் நிகழ்த்திய உரை வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அதே ஆண்டு ‘வேலையும் சுதந்தரமும் வேண்டி வாஷிங்டனுக்குப் பேரணி’ என்ற மிகப்பெரிய பேரணிக்குத் தலைமை தாங்கினார். சமாதானத்துக்கான இவரது மகத்தான பணியைப் பாராட்டி, 1964ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தவரை, 1968 ஏப்ரல் 4 அன்று ஜேம்ஸ் ஏர்ல் ரே என்ற நிறவெறியன் சுட்டுக் கொன்றான்.
சுவாமி விவேகானந்தர்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமைச் சீடரான சுவாமி விவேகானந்தர் வேதாந்த தத்துவத்தின் செல்வாக்கு மிக்க ஆன்மிகத் தலைவர்களுள் ஒருவர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவரும் இவரே. 1863 ஜனவரி 12 அன்று விஸ்வநாத் தத்தா - புவனேஸ்வரி தேவி ஆகியோருக்கு மகனாக, கொல்கத்தாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. துறவியானதைத் தொடர்ந்து தனது பெயரை சுவாமி விவேகானந்தர் என்று மாற்றிக் கொண்டார்.
குழந்தைப் பருவம் முதற்கொண்டே படிப்பு மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். இசை, தியானம் ஆகியவற்றில் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டார். சமூகத்தில் நிலவிய சாதி, மத வேறுபாடுகளை எதிர்த்ததுடன், மூடப்பழக்க வழக்கங்களையும் கடுமையாகச் சாடினார். 1879ல் கொல்கத்தாவிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார். பின்னர் தத்துவம் பயின்றார். ‘பிரம்ம சமாஜத்தில்’ இணைந்தார். ஆனாலும் தனது தேடல்களுக்கான பதில்கள் கிடைக்கவில்லை. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து, ‘கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். ‘ஆம், உன்னைப் பார்ப்பது போலவே தெளிவாகப் பார்த்தேன்’ என்ற பதிலிலிருந்த நேர்மையும் உண்மையும் அவரையே தனது குருவாக ஏற்றுக்கொள்ள வைத்தன. 1886ல் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் காலமான பிறகு, அவரது வாரிசாகப் பரிந்துரைக்கப்பட்டார். நாடு முழுவதும் நீண்ட பயணம் மேற்கொண்டார். இந்தியாவின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொண்டார். மன்னர்களின் அரண்மனைகளிலும் ஏழைகளின் குடிசைகளிலும் தங்கி அவர்களுடன் நெருங்கிப் பழகினார். 1892 டிசம்பர் 24ல் கன்னியாகுமரியை அடைந்தார். ஒரு பாறையின் மீதமர்ந்து தொடர்ந்து 3 நாள்கள் தியானம் செய்தார். அவர் அமர்ந்து தியானம் செய்த பாறையே இன்றைக்கு ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயருடன் புகழ் பெற்றிருக்கிறது.
1893ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு, ‘அமெரிக்கச் சகோதர, சகோதரிகளே’ என்று அழைத்த சிறப்பு மிக்க வார்த்தைகள் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. இந்திய வரலாறு, சமூகம், பண்பாடு, நாகரிகம், இலக்கியம், ஆன்மிகம், தத்துவம் ஆகியவை குறித்து பல்வேறு நாடுகளில் ஆற்றிய சொற்பொழிவுகள் அற்புதமானவை! 1897ல் இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் இந்தியர்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைக்க எண்ணினார். சமூக சேவை மூலமே இது சாத்தியப்படும் என்பதை உணர்ந்து ‘ஸ்ரீ ராமகிருஷ்ணமிஷன்’ மற்றும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்’ ஆகியவற்றை நிறுவினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருண்டு கிடந்த இந்தியாவின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த சுவாமி விவேகானந்தர், 1902 ஜூலை 4 அன்று மறைந்தார்.
மொஸார்ட்
உலகப் புகழ் பெற்ற மாபெரும் இசை மேதையான மொஸார்ட், 1756 ஜனவரி 27 அன்று அன்னமரியா- லியோபோல்ட் மொஸார்ட் தம்பதிக்கு மகனாக ஆஸ்திரியாவில் பிறந்தார். 3 வயதில் இசைக் கருவியை மீட்டுதல், 4 வயதில் இசை நூல்களைக் கற்றல், 5 வயதில் பாடல்களை இயற்றுதல் என்று குழந்தை மேதையாகத் திகழ்ந்தார் மொஸார்ட்!தனது பத்து வயதுக்குள் அனைத்து இசைக் கருவிகளையும் மீட்டும் திறன் பெற்றிருந்தார். ஐரோப்பாவில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறாத நாடே இல்லை என்னும் அளவில் புகழ் பெற்றார். போப்பாண்டவர் முன்னிலையில் நடத்திய இசை நிகழ்ச்சி இவருக்கு மிகுந்த புகழைப் பெற்றுத் தந்தது. உலகையே இசையால் மயங்க வைத்த மொஸார்ட்டின் சொந்த வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. ஆய்வுப் பணி, இசை நிகழ்ச்சி, புதிய இசை வடிவங்களைக் கண்டுபிடித்தல் என ஓய்வில்லாமல் உழைத்தார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையானார். 1791 டிசம்பர் 5. உலகையே மகிழ்வித்துக் கொண்டிருந்த நாதம் அடங்கியது. மொஸார்டின் இசையைக் கேட்டால் அகநிலை மாறுதல், கற்பனைத் திறன் மேம்படுதல், மூளையின் பல பகுதிகள் தூண்டப்படுதல் எனப்பல கோணங்களில் ‘மொசார்ட் விளைவு’ ஆய்வுகள் நடைபெற்று வருவதே இவர் பெருமைக்குச் சான்று. 35 வயதுக்குள் 41 சிம்ஃபனிகள், 27 பியானோ நிகழ்ச்சிகள், 23 ஸ்ட்ரிங் க்வார்டெட், 7 ஓபெரா என யாராலும் கற்பனை கூட செய்ய முடியாத இசைச் சாதனைகளை நிகழ்த்தி முடித்துள்ளார் மொஸார்ட்!
About Water in tamil
|
உலகில் பெரும்பகுதி தண்ணீர்தான் இருக்கிறது. நம் உடலுக்குள்ளும் பெரும்பகுதி தண்ணீர்தான். தண்ணீர் சேர்க்காமல் எதையும் சமைக்க முடியாது, சாப்பிட முடியாது. ஒருவேளை சாப்பாட்டை மறந்தாலும், தண்ணீர் குடிக்காமல் மனிதர்களால் உயிர்வாழவும் முடியாது.
மனிதர்கள் மட்டுமல்ல, செடி, கொடி, மரத்தில் ஆரம்பித்து நுண்ணுயிரிகள், விலங்குகள், பறவைகள் என எல்லாவற்றுக்கும் தண்ணீர் தேவை. எந்த அளவு தேவை என்ற கணக்கு மாறுமே தவிர, தண்ணீர் இன்றி வாழும் தாவரம், உயிரினம் எதுவுமே கிடையாது. உலகின் ஜீவாதாரம் என்று பார்த்தால், அது தண்ணீர்தான்!வேதியியல் பாடத்தில், தண்ணீரின் ரசாயனக் குறியீடு H2O என்று படித்திருக்கிறோம். அதாவது, இரண்டு பங்கு ஹைட்ரஜன், ஒரு பங்கு ஆக்ஸிஜன் இணைந்து கிடைப்பது தண்ணீர்.ஆனால், மற்ற ரசாயனங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம், தண்ணீர் இப்படித்தான் கிடைக்கும் என்று யாராலும் வரையறுத்துச் சொல்ல இயலாது. பூமியிலும் மற்ற சில கிரகங்களிலும் திடப்பொருள், திரவப் பொருள், வாயு என்று மூன்று வடிவங்களிலும் தண்ணீர் கிடைக்கிறது.திடப் பொருள், அதாவது பனிக்கட்டி. ரெஃப்ரிஜிரேட்டரில் நாம் உறைய வைக்கிற ஐஸ் கட்டியில் தொடங்கி, கடலுக்குள் தென்படும் பெரிய பனிப்பாறைகள் வரை, தண்ணீரின் திட வடிவம்.திரவ வடிவம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். குழாயில் பிடித்துக் குடிக்கும் தண்ணீரில் ஆரம்பித்து ஆறு, கடல், அருவி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.வாயு வடிவம் என்பது நீராவி. தண்ணீரைப் பாத்திரத்தில் வைத்துக் கொதிக்க வைத்தால், ஒரு கட்டத்துக்கு மேல் அது வாயு வடிவத்தில் வெளியேறத் தொடங்கிவிடும்.இப்படிப் பல விதங்களில் நம்மைச் சுற்றித் தண்ணீரின் மூன்று வடிவங்களும் இருக்கின்றன. ஒன்றை இன்னொன்றாக மாற்றுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மூன்று நிலைகளிலும் தண்ணீர் சமையலுக்குப் பயன்படுகிறது. பனிக்கட்டியை வைத்துப் பழரசங்களைக் குளிர்விக்கிறோம், திரவத்தை வைத்துக் காய்கறிகளை வேக வைக்கிறோம், வாயு வடிவத்தில் இட்லி, புட்டு போன்றவற்றை வேகச் செய்கிறோம்!‘தண்ணீர்’ என்ற தமிழ்ச் சொல்லே மிக அழகானது. தண்மை + நீர் என்று அதைப் பிரிக்க வேண்டும். அதாவது, குளிர்ச்சியான நீர்.இந்தப் பூமியில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு தண்ணீர்தான். ஓர் உலக வரைபடத்தை எடுத்துப் பாருங்கள், எங்கு பார்த்தாலும் நீலக் கடல் தெரியும். கடல் தவிர ஆறு, ஏரி, குளம், குட்டை, அருவி என்று பல இயற்கை வழிகளிலும் கிணறு, அணைக்கட்டு, நகராட்சித் தொட்டிகள் எனக் குறுகி, நம் தெருமுனையிலும் வீட்டிலும் உள்ள குழாய்கள் வரை நீரைப் பெறலாம், போதாக்குறைக்கு மழையாக வானத்திலிருந்தும் கொட்டும்.உலகில் உள்ள தண்ணீரில் 97% கடலில் உள்ளது. அதை நாம் அப்படியே குடிக்க முடியாது. சுத்திகரித்துக் குடிப்பதற்கும் இப்போதைய தொழில் நுட்பத்தில் ஏகப்பட்ட செலவாகும்.அடுத்து, 2% தண்ணீர் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாக உறைந்திருக்கிறது. அவற்றையும் நாம் வரவழைத்துக் குடிப்பது சாத்தியமில்லை. மீதமுள்ள 1%, அதாவது ஒரே ஒரு சொட்டு, அந்தத் தண்ணீரைதான் நாம் குடித்துக் கொண்டிருக்கிறோம். அதை வைத்துதான் ஒட்டுமொத்த உலகமும் வாழ்ந்தாக வேண்டும்! இதனால்தான் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்குச் சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை.
தண்ணீர் இருக்கிறது என்பதற்காக அதனை வீணடிப்போரும் உண்டு. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. பெரும்பாலானோர் தாங்கள் நீரை வீணடிக்கிறோம் என்று புரியாமலே அதனை வாரி இறைக்கிறார்கள்.உதாரணமாக, ஒருவர் தினமும் பாத் டப்பில் குளிக்க நூறு லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம், அதையே அவர் ஒரு வாளியில் பிடித்துக் குளித்தால் இருபத்தைந்து லிட்டர் போதும்.இன்னொருவர் தண்ணீர்க் குழாயைத் திறந்துவிட்டபடி பல் துலக்குகிறார். இரண்டு நிமிடங்கள்தான். அதற்குள் அவர் வீணாக்கும் தண்ணீர் எவ்வளவு தெரியுமா? சுமார் 15 லிட்டர்கள். இப்படி உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொருவரும் தினசரி முப்பது முதல் ஐம்பது லிட்டர் வரை தண்ணீரைச் சேமித்தாலே போதும். நமக்கும் நல்லது, பூமிக்கும் நல்லது!கடலில் இருப்பதும் தண்ணீர்தான். நம் வீட்டில் குழாயில் வருவதும் தண்ணீர்தான். பாட்டிலில் விற்பனையாவதும் தண்ணீர்தான். ஆனால், கடல் நீர் உப்புக் கரிக்கிறது, நம் வீட்டுத் தண்ணீர் சாதாரணமாக இருக்கிறது, பாட்டில் தண்ணீர் சற்றே இனிப்பாக உள்ளது... உண்மையில் தண்ணீரின் சுவைதான் என்ன?தூய்மையான நீருக்கு நிறம் கிடையாது, சுவை கிடையாது, வாசனையும் கிடையாது! கடல் நீரில் உப்பு கலந்துள்ளது. ஆகவே, அதன் சுவையை அது பெற்றுவிடுகிறது. பாட்டில் தண்ணீரில் பல தாதுகள் சேர்ந்திருப்பதால், அதுவும் ஒரு சுவையைப் பெறுகிறது. கடல், ஆறு என நிலப்பரப்புக்கு மேலே கிடைப்பது போலவே, அதன் கீழேயும் தண்ணீர் உள்ளது. இதனைப் பெரிய கிணறு வெட்டியோ, ஆழ்துளைக் கிணறை அமைத்தோ நாம் மேலே கொண்டு வரலாம். அதன் தரத்தைப் பொறுத்துக் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ மற்ற வேலைகளுக்கோ பயன்படுத்தலாம்.
இந்த நிலத்தடி நீரை நாம் உறிஞ்சி எடுக்க எடுக்க, அது மேலும் கீழே சென்று கொண்டிருக்கும். இந்த நிலையை மேம்படுத்த மழை நீர் சேகரிப்புத் திட்டங்கள் உதவும்!விவசாயத்திற்கு மழை அவசியம். சரியான நேரத்தில், சரியான அளவில் மழை பெய்தால்தான் பயிர்கள் சிறப்பாக வளரும், அறுவடையும் நன்றாக இருக்கும். ஆகவே, விவசாயத்தை நம்பியிருந்த நம் முந்தைய தலைமுறை மக்கள் மழையைக் கொண்டாடினார்கள். பலவிதங்களில் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி பூமியை வளப்படுத்தினார்கள்.மனித உடலில் முழுக்கத் தண்ணீர் இருந்தாலும், அது இயங்குவதற்கு வெளியிலிருந்து தண்ணீர் ஒரு குறிப்பிட்ட அளவில் தினமும் தேவை. இதற்காக, ஒரு நாளைக்கு 8 தம்ளர் என்ற அளவு சிபாரிசு செய்யப்படுகிறது. ஆனால், இதை நாம் கண்டிப்பாக எண்ணிப் பின்பற்ற வேண்டியதில்லை. வெயில் அதிகமுள்ள நாள்களில் சற்றே கூடுதலாகவும், குளிர் நாள்களில் குறைவாகவும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் ஆனால் தொடர்ந்து மிகக் குறைவாகவே தண்ணீரைத் குடிக்கிறவர்களின் உடலுக்குப் பின்னாளில் பல பிரச்னைகள் வரக்கூடும். ஆகவே, தினமும் மறக்காமல் நான்கு முதல் ஐந்து தம்ளர் தண்ணீரைக் குடித்துவிடுவது நல்லது!தண்ணீர் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்குப் பலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது, தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பது.தண்ணீரை அருந்துவது, சமைப்பது ஒருபுறமிருக்க, அது இன்னும் பலவிதங்களில் நமக்குப் பயன்படுகிறது. நீரால் உடலைத் தூய்மைப்படுத்தலாம், பாத்திரங்களைத் தேய்க்கலாம், விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம், நெருப்பை அணைக்கலாம், இயந்திரங்கள் செயல்படும் போது உண்டாகும் சூட்டைக் குளிர்விக்கலாம்... அவ்வளவு ஏன், அதிலிருந்து மின்சாரம்கூட எடுக்கலாம்!நீர் மின்சாரம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓடுகிற அல்லது கொட்டுகிற நீரின் ஆற்றலைப் பயன்படுத்தி இயந்திரங்களைச் சுழலவிட்டு, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
தண்ணீரைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவதும் உண்டு. கப்பல்கள், சிறு படகுகள் போன்றவற்றில் மனிதர்களோ பொருள்களோ பயணம் செய்யலாம். |
உங்கள் பணி என்ன? - சுவாமி விவேகானந்தர்
''ஏற்கெனவே இருப்பதை அழிப்பதல்ல என் பணி; மாறாக, இருப்பதைப் புனர்நிர்மாணம் செய்வதே!
உலக நாடுகளின் சரித்திரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மகாபுருஷன் அதன் தேசிய வாழ்வின் கேந்திரமாக விளங்குவான். அந்த மகாபுருஷனது கருத்துக்கள் மக்கள் யாவர் மீதும் சக்தியுடன் பாயும்.
என் சீடர்களாகிய நீங்கள் புத்திசாலிப் பிள்ளைகள்தான். ஆயினும், காரியத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்?
உங்களது ஒரு வாழ்வை மற்றுமுள்ள பலரின் வாழ்வுக்காக நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். வேதாந்தம் கற்பது, தியானம் செய்வது முதலானவற்றை அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளலாம்!
'பிறருக்குப் பணி செய்வதிலேயே இந்த உடல் அழியட்டும்’ என்று நீங்கள் நினைக்கவேண்டும். அப்போதுதான், நீங்கள் என்னிடம் வந்தது வீண்போகவில்லை என அறிந்துகொள்வேன்!''
'என்னை நீ விலக்கலாமா?’
'துறவியர்க்கு எல்லோரிடத்தும் எல்லாவற்றிலும் சம பாவம் இருக்கவேண்டும்’ என்று சுவாமிஜி உணர்ந்து கூறிய ஒரு நிகழ்ச்சி.
சுவாமிஜி அப்போது ஜெய்ப்பூரில், மன்னரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். ஒருநாள் மாலையில், மன்னருக்காக ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதற்கு சுவாமி விவேகானந்தரையும் அழைத்தார் மன்னர். ஆனால் சுவாமிஜியோ, நாட்டியப் பெண் ஒருத்தியின் கலை நிகழ்ச்சிக்கு சந்நியாசி ஆகிய தாம் வருவதற்கில்லை என மறுத்துவிட்டார். இந்தச் செய்தி அந்த நாட்டியப் பெண்ணுக்குத் தெரிந்துவிட்டது. அம்பு பட்ட வெண்புறா கதறுவதுபோல மிகவும் சோகத்துடன் பாடினாள் அவள். அந்தப் பாடலின் கருத்து...
சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ? காளிந்தி நதியின் புனித நீரும், கழிகாலில் வழிகின்ற இழிநீரும் ஒரு நிலையில் இனிய கங்கையில் இணைகின்றபோது ஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொண்டவன் அன்றோ! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே! பரமனே, சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?’
அவளது அந்த அற்புத கீதம் சுவாமிஜியின் காதில் விழுந்தது. உள்ளத்தைத் தொட்டது. சுவாமிஜியின் இதயம் இளகியது. 'மாசு நிறைந்தவள்’ என்று உலகத்தவர் யாவரும் கருதிய ஒரு பெண்தான் எவ்வளவு அழகாக தனக்கு உயர்ந்ததொரு தத்துவத்தை உணர்த்திவிட்டாள்! பாவமும் புண்ணியமும் இறைவனின் சந்நிதியில் ஏது? பரமனின் முன்பு யாவும் ஒன்றுதானே! மாயைக்கு உட்பட்ட உலக மக்களுக்கு பேதங்கள் இருப்பது இயல்பு. ஆனால், மாயையைக் கடந்து, பிரம்மத்தில் லயித்திருக்கும் சந்நியாசிக்கு சமபாவம்தானே இருக்கவேண்டும்?’
சுவாமிஜி உடனே நேராக நாட்டியம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார். இயல்பிலேயே ஒளிவீசும் அவரது கண்கள் கண்ணீரால் பளபளக்க, பாடிய அணங்கை அன்னையைக் காண்பதுபோல் அன்புடன் நோக்கி, ''தாயே! நான் குற்றவாளி ஆகிவிட்டேன். இங்கு வராமலே இருந்து உன்னை அவமதித்த பாவத்துக்கு ஆளாகி இருப்பேன். ஆயினும் தாயே... அதிர்ஷ்டவசமாக உன் சங்கீதம் என் அறிவை விழிப்புறச் செய்துவிட்டது!'' என்றார்.
சுவாமிஜி, பிரேமானந்தருடன் உலாவச் சென்றார். அது 1902-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி, வெள்ளிக்கிழமை. அன்று மாலையில், பற்பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்ற அவர், வேதத்தைப் பிரசாரம் செய்யவேண்டியதன் அவசியம் குறித்துச் சொன்னதுடன், வேதத்துக்காக ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளியிட்டார்.
''சுவாமிஜி, வேதத்தைப் படிப்பதால் என்ன விசேஷ பயன் கிடைக்கும்?'' என்று கேட்டார் பிரேமானந்தர்.
சுவாமிஜி பளிச்சென்று, ''மூடநம்பிக்கைகள் அழியும்'' என்றார்.
மடத்துக்குத் திரும்பிய சுவாமிஜி சாதுக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பற்பல நாடுகள் உன்னதமாக எழுந்ததையும், வீழ்ந்ததையும் பற்றிக் கூறினார். ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் பேசுகையில், ''இந்தியா அமரத்துவம் பெற்றது. ஆண்டவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால், இந்தியா என்றும் வாழும். மாறாக அரசியலையும், சமூக சச்சரவுகளையும் தேடிப் போனால், இந்தியா செத்துவிடும்'' என்றார்.
இதுவே அவரது இறுதியான போதனை.
தாம் யார் என்று அறிந்து, அதுவாகவே சுவாமிஜி மாறப்போகும் அந்த இறுதியான நாளில், அதிகாலையில் எழுந்த சுவாமிஜி, சிறிது தேநீர் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்தார்.
வழக்கத்துக்கு மாறாக பூஜாகிருகத்தின் கதவுகளை எல்லாம் மூடிவிட்டு, ஏகாந்தமாக தியானம் செய்யலானார். தியானத்தைவிட தியாகம் பெரிது என்று வாழ்ந்திருந்த நாட்களெல்லாம் முடிந்துவிடப் போகும் தினம் அது என்பதாலோ என்னவோ, சுவாமிஜி வெகு நேரம் தியான சமாதியில் ஆழ்ந்திருந்தார்.
தியானம் முடிந்து பூஜாகிருகத்தின் படிகளில் இறங்கி வந்த சுவாமிஜி, தன்னையும் அறியாமல் அம்பிகையைப் பற்றிய கமலாகாந்தரின் அற்புதமான பாடலைத் தமது அமுதமான குரலில் பாடினார். பேலூர் மடத்தினர் அந்தத் தீஞ்சுவைக் குரலைக் கேட் டனர்- அதுதான் தாங்கள் கடைசியாகக் கேட்கும் குரல் என்று அறியாமலே!
தம்மையறியாமலே பாடியதுபோல், பாடல் முடிந்ததும் தம்மையறியாமலே பேசவும் செய்தார் சுவாமிஜி. ''காளியை மட்டும்தானா... இந்த விவேகானந்தனையும்கூட யார் புரிந்துகொண்டார்கள்? அவன் என்ன செய்தான் என்று யார் தெரிந்துகொண்டார்கள்? இன்னொரு விவேகானந்தன் இருந்தால், அவனால்தான் புரிந்துகொள்ள முடியும். இன்னும் ஒரு விவேகானந்தன் என்ன... கால வெள்ளத்தில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்..!''
Subscribe to:
Posts (Atom)



