Sunday, August 10, 2014

அதி ஆடம்பர மோட்டார் வீடு (Volkner Mobil Ultra Luxury Motorhome)


The Volkner Mobil Ultra Luxury Motorhome, comes complete with a fully-fledged kitchen, a high-end entertainment system, and even a secret storage space designed to tuck away a supercar! All of this luxury starts at a price tag of around £750,000 and rises to a fully-loaded £1.2million depending on the buyer’s own choice of fixtures and fittings. The 40ft long rolling home is something a touring rockstar would be proud of, and has certainly wowed the crowds at the Caravan Salon in Dusseldorf, Germany.
The hidden garage is nestled between the front and rear wheels of the vehicle, and is designed to accommodate a low riding sports car such as a Lamborghini or Ferrari. The access door to the cool compartment opens easily at the press of a button situated on a side panel that causes the hatch to open and the cargo floor to drop to ground level to allow the car to be loaded. 

இது கடையா? இல்ல கடலா ? (Apple Store at Shanghai, China)

Apple Store at Shanghai, China

The architects of Bohlin Cywinski Jackson turned the entrance of Apple Store from Shanghai in a spectacular glass cylinder which captivates the whole attention of the exterior space. The concept was simple, they wanted to express the slogan of Apple: "Simplicity is the Ultimate Sophistication". Not treated like a barrier between employees and customers, the glass creates the psychological effect to perceive that everything could be accessible to you. The stares are fixed to an interior small cylinder also from glass, so they appear to visitors like they're floating.

இன்றும் இயங்கும் அதிசய ஆப்பிள் 1 கம்ப்யூட்டர்

Rare working Apple 1 computer sold for $374,500

A rare Apple 1, the first ready-made personal computer, has sold for $374,500 in an auction at Sotheby's, New York. The computer, consisting only of a naked motherboard, with primitive microchips and circuitry exposed, is thought to be one of only around half a dozen working examples of Steve Jobs and Steve Wozniak's first hardware. The price was considerably more than Sotheby's estimate of $180,000 and sets a new record for a sale of one of the machines. It's estimated that of the Apple 1 original 200, only around 50 remain, and only six of those are known to be in working condition.

குசும்புக்கார குழந்தை ... (Naughty Kid with Dad Boss)

Naughty Kid with Dad Boss

The boss wondered why one of his most valued employees was absent but had not phoned in sick one day. Needing to have an urgent problem with one of the main computers resolved, he dialed the employee’s home phone number and was greeted with a child's whisper.
"Hello ?"
"Is your daddy home?" he asked.
"Yes", whispered the small voice.
May I talk with him?
The child whispered, "No."
Surprised and wanting to talk with an adult, the boss asked, "Is your Mommy there?" 
"Yes"
"May I talk with her?" 
Again the small voice whispered, "No"
Hoping there was somebody with whom he could leave a message, the boss asked, "Is anybody else there?"
"Yes", whispered the child, "a policeman."
Wondering what a cop would be doing at his employee's home, the boss asked, "May I speak with the policeman?"
"No, he's busy", whispered the child.
"Busy doing what?"
"Talking to Daddy and Mommy and the Fireman", came the whispered answer.
Growing more worried as he heard a loud noise in the background through the earpiece on the phone, the boss asked, "What is that noise?"
"A helicopter" answered the whispering voice.
"What is going on there?" demanded the boss, now truly apprehensive.
Again, whispering, the child answered, "The search team just landed a helicopter"
Alarmed, concerned and a little frustrated the boss asked, "What are they searching for?"
Still whispering, the young voice replied with a muffled giggle… "ME..."

Wednesday, August 6, 2014

பொதிகை மலை குற்றால சீசன்



வழக்கமாக குற்றால சீசன் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீசன் தொடங்குவதில் கால தாமதம் ஏற்படுவதும், சீசன் தொடங்காமல் கண்ணாமூச்சி காட்டிப்போவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டு குற்றால சீசன் கொஞ்சம் காலதாமதமாக ஜூன் 2வது வாரம் தொடங்கி அனைவரின் எதிர்பார்ப்பினையும் பூர்த்தி செய்துள்ளது. கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு குற்றாலத்துக்கு கார், வேன், பஸ்களில் படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மணிநேரம் அல்ல ஒரு நாள் முழுவதும் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்தாலும் களைப்பே தெரிவதில்லை. தண்ணீர் மேலிருந்து பொத் பொத்தென்று நம்மேல் விழுந்தாலும் உற்சாகமூட்டும் சுகம் தான் ஏற்படுகிறது. இதை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.

குற்றாலத்தில் ஒன்பது அருவிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்த்துவரலாம்,
 
பேரருவி: பேரருவி எனப்படும் மெயின் அருவி குற்றாலம் பஸ் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. பேரருவியில் தண்ணீர், வெள்ளிக்கொலுசுகளின் முத்துக்கள் போன்று சடசடவென்று கொட்டுவதைக் காணவே கண்கள் ஆயிரம் வேண்டும்.

உச்சி மலையில் இருந்து வழிந்தோடி வரும் நீர் பால் அருவி, தேனருவி, செண்பகாதேவி அருவிகளைக் கடந்து, ஆபத்தான, அய்யோ நினைத்தாலே அச்ச மூட்டும் பொங்குமாகடலில் விழுந்து தரையை நோக்கிச் சீறிப்பாய்கிறது. 
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,200 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் பேரருவியின் நீர்த்துவாளைகள் வெண்மேகம் பனித்துளி போன்று சுற்றுலா பயணிகளைப் பன்னீர் தெளித்து வரவேற்கும்.

இந்த அருவியில் கட்டப்பட்டுள்ள ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கும். அந்தச் சமயங்களில் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்படும்.

சிற்றருவி: மெயின் அருவிக்கு மேலே இருக்கும் சிற்றருவிக்கு மெயின் அருவியிலிருந்துதான் தண்ணீர் வருகிறது. பேரருவியைப் போன்று இங்கும் உற்சாகமாகக் குளித்து மகிழலாம்.

புலியருவி: ஐந்தருவிக்குச் செல்லும் வழியில் புலியருவி வழிந்தோடுகிறது. சிறுவர், சிறுமியர் அச்சமின்றி, ஆட்டம், பாட்டத்துடன் குளித்து மகிழும் இந்த அருவியை ‘சிறுவர் அருவி’ என்பார்கள்.

முன்காலத்தில் அடர்ந்த வனத்துக்குள் குடும்பத்தோடு வாழும் புலிகள் இங்கு வந்து தண்ணீர் குடித்துச் செல்வதால் இந்த அருவிக்குப் புலியருவி எனப் பெயர் வந்ததாம். ஆனால் இப்பவெல்லாம் புலி என்ன எலி கூட வருவதில்லை என்கிறார்கள்.

செண்பகாதேவி அருவி: மெயின் அருவியிலிருந்து சுமார் 600 அடி உயரத்தில் செண்பகாதேவி அருவி உள்ளது. இந்த அருவிக்கு, கற்கள் நிறைந்த கரடு முரடான மலைப்பாதை வழியாகச் சுமார் 2 கி.மீ. தூரம் கால்நடையாக நடந்துதான் செல்ல வேண்டும்.

இந்த அருவியின் தடாகத்தில் ஓவென்ற இரைச்சலுடன் கொட்டும் நீரில் உற்சாகமாகக் குளித்து மகிழலாம். இதில் மிகவும் கவனமாகக் குளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அருவிக்கு அருகில் உள்ள செண்பகாதேவி அம்மனையும் தரிசித்துவிட்டு வரலாம்.

தேனருவி: செண்பகாதேவி அருவியின் மேலுள்ள பாறைகளின்மேல், மரங்கள் அடர்ந்த பசுமை சூழ்ந்த வனத்துக்குள் அச்சமூட்டும் வகையில் செல்லும் ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்றால் தேன் அருவியை அடையலாம்.

இந்த அருவி வழிந்தோடும் பகுதியிலுள்ள பாறைகளில் தேன்கூடுகள் மிகுந்து காணப்படும். தேன்கூடுகள் வழியாக வழிந்தோடி வருவதால் இந்த அருவி தேனருவி என்ற பெயரைப் பெற்றது. பாதுகாப்பு கருதி இந்த அருவிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலருவி: அகத்திய முனிவரால் அடையாளம் காணப்பட்ட பொதிகை மலையின் உச்சியில் தோன்றும் அருவியே பாலருவி. இந்த அருவியில் தண்ணீரானது வெள்ளை வெளேரென்று பால் போன்ற நிறத்தில் உருவாகிக் கொட்டுவதால் இது பாலருவியானது.

ஐந்தருவி: குற்றாலம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளதுதான் ஐந்தருவி. மலையில் தவழ்ந்து, தரையை நோக்கிப் பாய்ந்தோடி வரும் நீர் ஐந்து கிளைகளாகப் பிரிந்து கொட்டுவதால் இது ஐந்தருவி எனப்படுகிறது. ஐந்தருவியின் மூன்று கிளைகளில் ஆண்களும், இரண்டு கிளைகளில் பெண்களும் குளிக்க இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழத்தோட்ட அருவி: ஐந்தருவியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த அருவி பழ மரங்கள் நிறைந்த வனத்துக்குள்ளிருந்து பாய்ந்துவரும் வேளையில் பழங்களை அடித்து இழுத்து வருவதால் இதற்கு இந்தப் பெயர். இந்த அருவியில் குளிக்க வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதில் கொஞ்சமல்ல நிறைய வருத்தம் சுற்றுலாப் பயணிகளுக்கு.

பழைய குற்றால அருவி: குற்றாலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் கடையம் செல்லும் வழியில் இருக்கிறது பழைய குற்றால அருவி. முதன்முதலாக இந்த அருவி தான் குற்றால அருவியாக இருந்து, பழையதாக மாறிவிட்டதால் இதற்கு இந்தப் பெயர்.

வெயில் இன்றி கருமேகமூட்டத்துடன் காட்சி அளிக்கும் வானம், கார் மேகத்துடன் உறவாடும் உயரமான மரங்கள், மூலிகைச் செடிகளுடன் கலந்து வீசும் சுகாந்த காற்று, ஆங்காங்கே வித்தியாசமான குரல் கொடுத்து அழைக்கும் அரிய வகைப் பறவைகள் என இயற்கை கொஞ்சி விளையாடும் இந்த அருவிகளில் குளிப்பது எதற்குமே ஈடாகாது.

சோனி சைபர் ஷாட் (Sony Cyber-shot RX100 III)



என்னதான் ஸ்மார்ட் போன்களில் விதவிதமான கேமராக்கள் அதிக மெகா பிக்ஸலோடும், மிகையான தொழில்நுட்பத்தோடும் வந்தாலும், மொபைல் போன் என்பது கால், மெசேஜிங் போன்ற சேவைகளுக்கே பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக தொழில்நுட்ப கேமராக்கள் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களை மிகுதியாக பயன்படுத் தினால் பேட்டரி பெரும் அளவில் குறையும். இதனாலே இன்றும் டிஜிட்டல் கேமரா, SLR, DSLR போன்ற பிரத்யேக கேமராக்களின் மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் சோனி நிறுவனம் தனது புதிய கேமராவான ‘சோனி சைபர் ஷாட் RX100 III’-வை அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு சிம்பிளாகவும் ஸ்டைலாகவும் தோற்றமளிக்கும் இந்த சைபர் ஷாட் RX100 III, 1.0 type CMOS sensor (13.2 x 8.8mm) தொழில்நுட்பத்தைக் கொண்ட உலகத்தின் முதல் கேமரா என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

20.2 மெகா பிக்ஸல்ஸ் கொண்ட இந்த கேமரா, 1.0 type CMOS sensor தொழில்நுட்பத்தைக் கொண்டு படங்களை மிகத் துல்லியமாகவும் அதிக தரத்தோடும் எடுக்கிறது. அதிக விட்டம் கொண்ட F1.8 ‘Carl Zeiss Vario-Sonnar T lens’ கேமராவின் ‘Defocus’ தன்மையை மெருகூட்டும் என்று சொல்லப்படுகிறது. ‘BIONZ’ இமேஜ் பிராசஸர் எந்தவொரு பொருளையும் 0.13 விநாடிகளில் ஃபோகஸ் செய்து படம் எடுத்துவிடுமாம். மேலும், இந்த பிராசஸர் குறைந்த வெளிச்சத்திலும் சீரான படங்களை எடுக்க வல்லது.

மேலும், கைகளாலே லென்ஸைச் சுற்றி இருக்கும் வளையத்தைக் கொண்டு zoom, aperture, magnification, படத்தின் தன்மைகளை எளிமையாகவும் விரைவாகவும் மாற்றிக் கொள்ளலாம். சோனி சைபர் ஷாட் RX100 III-ன் 7.62cm LCD டிஸ்ப்ளே 1229k ரெஸல்யூசனை கொண்டுள்ளது. இந்த அதிக ரெஸல்யூஷன் டிஸ்ப்ளே மூலம் எடுத்த படங்களின் தரத்தைத் தெளிவாகவும் நேரடியாகவும் பார்த்துவிடலாம்.

இத்தனை சிறப்பம்சங்களை கொண்டுள்ள ‘சோனி சைபர் ஷாட் RX100 III-ன் இந்திய விலை ரூ.54,990.

Sunday, August 3, 2014

Indian National Flag

நமது தேசியக் கொடி உருவாக்கத்தில் பலரின் பங்களிப்பு இருக்கிறது. மேடம் காமா எனப்படும் பைக்காஜி காமா, வீர சாவர்க்கர், விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா போன்றோரும் ஆரம்ப கால தேசியக் கொடியை வடிவமைத்திருக்கிறார்கள்.




1907 ஆகஸ்ட் மாதம், ஜெர்மனியில் நடந்த ஒரு மாநாட்டில், இந்தியாவுக்கான தேசியக் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

1917-ஆம் ஆண்டு, பாலகங்காதர திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் சேர்ந்து, 'சுயாட்சிப் போராட்டம்’ தொடங்கினர். அப்போது, அவர்கள் வடிவமைத்த தேசியக் கொடியின், இடது ஓரத்தில், பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இருந்தது. இதை, இந்திய சுதந்திரப் போராளிகள் பலரும் எதிர்த்ததால், விரைவிலேயே திரும்பப் பெறப்பட்டது.

தற்போதுள்ள தேசியக் கொடிக்கு ஆரம்பமாக அமைந்தது, 1921-ல் பிங்காலி வெங்கையா என்பவர் உருவாக்கிய கொடி. இதில் பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் மட்டுமே இருந்தன. இது, இந்தியாவில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டது.
 
மதத்தைக் குறிப்பிடாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது தேசியக் கொடியில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1931-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சிவப்பு, பச்சை நிறங்களுக்கு இடையில் வெள்ளை நிறம் சேர்க்கப்பட்டது. நூல் நூற்கும் கை ராட்டையும் இணைந்தது. ராட்டையின் சக்கரங்கள், நமது தேசிய முன்னேற்றத்தைக் குறிப்பிட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்றதும், 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி, மூவர்ண தேசியக் கொடி வான் நோக்கி கம்பீரமாக உயர்ந்தது.

காங்கிரஸ் கட்சியின் கொடியும் தேசியக் கொடியும் ஒரே மாதிரியாக இல்லாமல், வேறுபடுத்திக் காட்டுவதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டது. ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, சரோஜினி நாயுடு, அம்பேத்கர் போன்றோர் அடங்கிய அந்தக் குழு, 1947 ஜூலை மாதம், தேசியக் கொடியை இறுதி செய்தது. கை ராட்டைக்குப் பதிலாக அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது.

 
1951-ல், இந்திய தரக் கட்டுப்பாட்டுத் துறையால், கொடியின் நீளம் மற்றும் அகலம், தயாரிக்கப் பயன்படுத்தும் துணியின் தரம் போன்ற பல விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டன.

 நமது நாட்டுக் கொடியைத் தயாரிக்க, குடிசைத் தொழில் கழகம் உரிமை பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டிலிருந்து, கர்நாடகா தார்வாடியில் உள்ள 'கதர் கிராமத் யோக சமுக்தா சங்கம்’ மூலம் தேசியக் கொடி தயாரிக்கப்படுகிறது.

 

தற்போதைய தேசியக் கொடியின் பொருள்... காவி நிறம், தைரியம் மற்றும் தியாகத்தைக் குறிக்கும். வெள்ளை நிறம், உண்மை மற்றும் தூய்மையைக் குறிக்கும். பச்சை நிறம், வளத்தைக் குறிக்கும். அசோகச் சக்கரம், நேர்மையைக் குறிக்கிறது.