Friday, August 2, 2013

beephone virus.. இந்தியாவில் பரவும் பீ போன் வைரஸ்

மிக வேகமாகப் பரவி, அதிக அழிவினை ஏற்படுத்தக் கூடிய பீ போன் (‘Beebone’ ) வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 20 பெயர்களில் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் தங்குகிறது.

இந்தியாவில் கம்ப்யூட்டர் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது ட்ரோஜன் வகை வைரஸ் என்றும், பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று, மற்ற வைரஸ்களையும் கம்ப்யூட்டரில் பதிக்கும் தன்மை கொண்டதாக இது உலவுகிறது.
டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க, கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக கம்ப்யூட்டரில் இணைத்து, எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் வசதியினை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும். விண்டோஸ் சிஸ்டம் பைல்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும். நம்பிக்கைக்கு சந்தேகம் தரும் இணைய தளங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மிக வலுவான பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
பீ போன் வைரஸுடன் இணைந்து வோப்பஸ் (Vobfus) என்ற வைரஸும் செயல்படுவதாக காஸ்பெர்ஸ்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்றை ஒன்று அழிக்கவிடாமல் காப்பாற்றும் தன்மை கொண்டுள்ளதால், இரண்டையும் தயாரித்த குழுக்கள் ஒருவருக்கொருவர் ஒரே தீய நோக்கத்துடன் இந்த வைரஸ்களைத் தயாரித்து அனுப்பி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீ போன் வைரஸ் பல பெயர்களில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு, அவற்றின் பெயர்களும் தரப்பட்டுள்ளன. அவை (Kaspersky), W32/Autorun.worm.aaeh!gen (McAfee), W32/VobFusBX (Sophos), Trojan horse ( Symantec), TrojanFBZZ! 41E0B7088DD9 (McAfee), Trojan. Win32.SelfDel.aqhh (Kaspersky), Trojan. Win32.Jorik.Fareit.qsl (Kaspersky), BeeboneFMQ! 039FA2520D97 (McAfee), W32.Changeup! gen40 (Symantec) and Worm.Win32.Vobfus.dxpf (Kaspersky).
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அனைவரும் இந்த பெயர்களில் பைல்கள் தென்பட்டால் மிகவும் கவனமாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலே, வைரஸின் பெயர்களைக் கண்டறிந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் பெயர்கள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment