முட்டைகளை வைத்து, இரண்டு எளிய பரிசோதனைகளைச் செய்து பார்க்கலாமா?
முட்டை - 2 கண்ணாடித் தம்ளர்கள் - 2 உப்பு - 4 ஸ்பூன் தண்ணீர் எப்படிச் செய்வது? இரண்டு தம்ளர்களிலும் ஒரே அளவில் தண்ணீரை நிரப்புங்கள். ஒரு தம்ளரில் 4 ஸ்பூன் உப்பைப் போட்டு, கலக்குங்கள். ஒவ்வொரு தம்ளரிலும் ஒவ்வொரு முட்டையை மெதுவாக விடுங்கள். என்ன நிகழ்கிறது என்று கவனியுங்கள். உப்பு சேர்த்த தம்ளரில் உள்ள முட்டை மேலே மிதக்கிறது. சாதாரண தண்ணீரில் போட்ட முட்டை தம்ளரின் அடியில் இருக்கிறது. என்ன காரணம்?
சாதாரண தண்ணீரின் அடர்த்தியை விட, உப்புத் தண்ணீரின் அடர்த்தி அதிகம். அதனால்தான் உப்புத் தண்ணீரில் முட்டை மிதக்கிறது. கடல்களில் கப்பல் மிதப்பதும் இதே காரணத்தால்தான்!
வேக வைத்த முட்டை எது?
வேக வைத்த முட்டை - 1 பச்சை முட்டை - 1 எப்படிச் செய்வது? இரண்டு முட்டைகளையும் ஒரே நேரத்தில் தரையில் சுற்றி விடுங்கள். என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். ஒரு முட்டை விரைவில் நின்று விடுகிறது. இன்னொரு முட்டை மெதுவாக நிற்கிறது. அதாவது வேக வைத்த முட்டை வேகமாக நிற்கும். பச்சை முட்டை மெதுவாக நிற்கும். காரணம்?
வேக வைத்த முட்டை திடப்பொருளாக மாறிவிடுகிறது. அதனால் விரைவில் நின்றுவிடுகிறது. பச்சை முட்டையில் திரவப் பொருள் உள்ளே இருக்கிறது. முட்டை சுற்றும்போது உள்ளே உள்ள திரவப் பொருளும் சேர்ந்து சுற்றுவதால், நிற்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது.
|
Thursday, March 6, 2014
மிதக்கும் முட்டை! simple physics test
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment