Saturday, August 23, 2014

அறிமுகமானது நோக்கியா லூமியா 530

இந்தியாவில், நோக்கியா லூமியா 530 ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அதிக பட்ச சந்தை விலை ரூ. 7,199. இரண்டு சிம்களை இயக்கக் கூடிய பட்ஜெட் விலை விண்டோஸ் போனாக இது கருதப்படுகிறது. இதில் FWVGA டிஸ்பிளே காட்டும் 4 அங்குல திரை உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப்ட்ரேகன் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் போன் 8.1. இதில் 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது.

ஒரு சிம்மிலிருந்து அழைப்புகளை மற்றொன்றுக்கு மாற்றும் வகையில் இரண்டு சிம்களும் இயங்குகின்றன. இதன் தடிமன் 11.7 மிமீ. எடை 129 கிராம். இதன் ராம் மெமரி 512 எம்.பி., இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. டார்க் கிரே, ஆரஞ்ச், வெள்ளை மற்றும் பச்சை வண்ணங்களில் இது கிடைக்கிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, இந்த போன் வாங்கும்போது, இரண்டு மாதங்களுக்கு இலவசமாக, மாதம் ஒன்றுக்கு 2 ஜி.பி. டேட்டா பெறும் திட்டம் வழங்கப்படுகிறது. ஸ்நாப் டீல் இணைய வர்த்தக தளத்தின் மூலம் இந்த போனை வாங்கப் பதிவு செய்திடலாம். இந்த தளம் ரூ. 7,345க்கு இதனை விற்பனை செய்கிறது.

No comments:

Post a Comment