Monday, January 13, 2014

பறிபோகும் தமிழன் வேலை!


எங்கு திரும்பினாலும் இந்தி பேசியபடி தம்மைக் கடந்து செல்லும் சிவந்தநிற மனிதர்கள். நாம் இருப்பது தமிழ்நாடுதானா என எண்ணத் தோன்றும் படியான நிலையில்... பணியிடங்களில் தமிழர்களைத் தேட வேண்டியுள்ளது. இச்சூழலில் தமிழர்களின் வேலைகள் பறிபோவதாகக் கூக்குரல் எழத் தொடங்கிவிட்டன.

சென்னை மட்டுமின்றி கோவை, திருப்பூர் போன்ற நகரங்களிலும் கட்டப்படும் மால்கள், மல்டிப்ளக்ஸ்கள், பெரிய கடைகள், உணவகங்கள், சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், தொழிற்சாலைகள், அழகு நிலையங்கள்... பல்வேறு தொழிற்பேட்டைகளிலும் வட இந்தியர்களே பெருமளவில் தென்படுகின்றனர். 

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னையில் மட்டும் மூன்றரை லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பீகார், ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்கள் மனைவி, குழந்தைகளோடு இங்கு வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

சென்னையில் அதிகமான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இவர்கள் இந்தத் துறையில் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடினமான வேலை என்றாலும் இவர்கள் அதனை எளிதாக மேற்கொள்வதோடு, அங்கேயே தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். வேகமாக பணிகள் நடப்பதோடு, குறைந்த கூலி என்பதால், உள்ளூர்த் தொழிலாளர்களைவிட, வடமாநிலத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது லாபகரமாக உள்ளது என்று பெரிய கட்டுமான நிறுவனங்கள் வடமாநிலத்தவர்களை முழுவதுமாக ஈடுபடுத்தி வருகின்றன. இதனால் கட்டுமானப் பணிகளில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட குறைந்தே போய்விட்டது. 

தமிழர்கள் வேலை பறிபோக என்ன காரணம் என்று அலசியதில்...

தமிழர்கள் நாள் ஒன்றுக்கு 650 ரூபாய் கூலி பெற்றார்கள். ஆனால், வடஇந்தியர்க்கு 450 ரூபாய் கொடுத்தாலே கூட்டம் கூட்டமாக வந்து விடுகிறார்கள். 
 
தொடக்கத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்களைத் தமிழர்கள் ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை. ஆனால், இப்போது அந்தப் பார்வை மெள்ள மெள்ள மாறுவதை உணர முடிகிறது. எதிர்காலத்தில் இவர்களின் வரவு நிச்சயம் ஒரு பெரிய சமூகப் பிரச்னையாக மாறும். இப்படி வருபவர்கள் இங்கேயே தங்கி விட்டால் தமிழ்நாட்டில் தமிழர்களைவிட இவர்களின் எண்ணிக்கை அதிமாகிவிடும். தற்போது சென்னையின் பொருளாதாரம் ராஜஸ்தானியர் மற்றும் குஜராத்தியர்களிடம்தான் இருக்கிறது. காரணம், எந்தத் தொழில் என்றாலும் மொத்தமாக விற்பனை செய்யும் முதலாளிகள் இவர்கள் தான்ஒருவேளை, நேரடியாகத் தொழில் செய்ய முடியவில்லை என்றால் மறைமுகமாக வட்டித் தொழில் மூலம் அவர்களது கரங்கள் அதில் இணைந்திருக்கும் என்பது சமூக ஆய்வாளர்களின் கருத்து. சென்னையின் பல பகுதிகளும் வடஇந்தியர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. வருங்காலத்தில் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் பெரும் சவாலாக இருப்பார்கள்"முன்பு தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் கடை தொடங்கினால் சொந்த ஊரைச் சேர்ந்தவர்களையே பணிக்கு அமர்த்துவர். காரணம், சொந்த மண் பாசம், விசுவாசம். இப்போது அவை எல்லாம் மலையேறிப் போய்விட்டன. சரியாக வேலைக்கு வருவதில்லை. வந்தாலும் அதிகச் சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திக்காரார்களைப் பொறுத்தவரை வேலை நேரம் தொடங்கும் முன்பே வந்து விடுகிறார்கள். விடுமுறை எடுப்பதில்லை. வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே சொந்த ஊருக்குப் போவார்கள். சொன்னதைச் சரியாகச் செய்கிறார்கள். வந்த ஆறு மாதத்திலே தெளிவாகத் தமிழ்ப் பேசக் கற்றுக்கொள்கிறார்கள்.
 
வேலை இல்லாமை, கடன் தொல்லை - குடும்பச் சூழல் காரணமாகவே இங்கு வேலை செய்ய வரு கிறோம் என்று வெளிமாநிலத்தவர் சொன்னால் அது உண்மையில்லை. அவர்களுக்கு அங்கேயும் வேலை கிடைக்கிறது. ஆனால், இங்கேதான் சாப்பாடு, டி.வி. வசதியோடு வேலை கிடைப்பதால் வசதியாக வாழ ஆசைப்பட்டே சென்னை வருகிறார்கள்.

Google Mobiles Price in india...

இணையதளத்தில் மட்டுமே கலக்கிக்கொண்டு இருந்த கூகுள், தற்போது மொபைல், டேப்லட் என அனைத்திலும் கால்பதிக்க ஆரம்பித்துள்ளது.  கூகுள் நிறுவனத்தின் மோட்டோ ஜி (Moto G) என்கிற மொபைல் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
 
மோட்டோரோலா நிறுவனத்தை கூகுள் வாங்கியபின் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் எந்த புதிய போனையும் வெளியிடவில்லை அந்த நிறுவனம். இந்தியாவில் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிந்தது என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்க, வரும் ஜனவரியில் மோட்டோ ஜி என்ற புதிய போனை இந்தியாவில் வெளியிடுகிறது மோட்டோரோலா.
மோட்டோ ஜி என்ற மொபைலை சமீபத்தில் பிரேசிலில் வெளியிட்டது கூகுள். நம்மூரில் ஐனவரி முதல் விற்பனைக்கு வரும் என்றாலும், இதற்கான புக்கிங்குகள் ஆரம்பித்துவிட்டனவாம். அதற்கு காரணம், அதன் குறைந்த விலையும் அதில் உள்ள ஆப்ஷன்களும்தான்.



4.5 இஞ்ச் நீளம் கொண்ட தொடுதிரை, இது ஐபோன் Snapdragon 400 SoC with a 1.2 GHz quad-core பிராசஸர் உள்ளது. இந்த பிராசஸர் மிகவும் வேகமாகச் செயல்படும் பிராசஸர்களில் ஒன்றாகும். டூயல் சிம், ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லிபீன் இயங்குதளம், எல்இடி ப்ளாஷ் உடன் 5 எம்பி பின் கேமரா, 1.3 எம்பி முன் கேமரா, 1நிஙி ரேம், 2070னீகிலீ பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற வசதிகளுடன் வருகிறது.

கூகுளின் வெளியீடு இது என்பதால் இந்த மொபைல் இந்தியாவில் வெற்றிபெறும் என்று நம்பலாம். இது அனைத்தையும்விட, இதில் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓஎஸ் உடன் வெளிவருகிறது. இந்த மொபைல் 16 ஜிபி-க்கு இன்டர்நெட் மெமரியும் கொண்டு வெளிவர இருக்கிறது. இதன் விலை தோராயமாக ரூ.12 - 14 ஆயித்துக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

A Real Star Acheiver Sachin Ramesh Tendulkar...

ஒழுக்கம்...எளிமை...தன்னம்பிக்கை !

 சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விருதைப் பெறும் முதல் விளையாட்டு வீரர் இவர்.

24 ஆண்டுகளாக தேசத்தின் வெற்றிக் கனவுகளைச் சுமந்த சச்சின், பல்வேறு வேற்றுமைகளைக் கடந்து, இந்தியர்களை இணைக்கும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 100 சதங்கள், 200 டெஸ்ட் போட்டிகள் என்று நீளும் சாதனைகளை சச்சின் தன்னுடைய தலைக்கு ஏற்றிக்கொண்டதே இல்லை.

கடைசிப் போட்டியில் விளையாடி விடைபெறும் போது, 'இந்தியனாக இருப்பதற்குப் பெருமைப்படுங்கள். எதுவும் சாத்தியம் என்று நம்புங்கள்’ என்று இளைஞர்களிடம் நம்பிக்கை விதைத்தார். ''என் ஆசான் அச்ரேக்கர், நான் நன்றாக ஆடியதாக இந்த 30 ஆண்டுகளில் என்றுமே சொன்னது இல்லை. 

அப்படிச் சொன்னால், நான் 'இது போதும்’ எனத் திருப்தி அடைந்து தேங்கிவிடுவேனோ என்பதால், அவர் பாராட்டியதே இல்லை. இன்றைக்கு என்னுடைய கடைசிப் போட்டி. நான் நன்றாக ஆடினேன் என்று இன்றைக்குச் சொல்வீர்களா ஆசானே?' என்றும் அடக்கத்துடன் பேசினார்.


சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதும் அவரது ஆசிரியர் ராம்காந்த் அச்ரேக்கர் அவரை அலைபேசியில் அழைத்து, 'வெல்டன் மை பாய்!’ என்று சொன்னபோது, சச்சினின் கண்கள் கலங்கிப்போயின.

சச்சினின் எளிமைக்கு அவருடைய அம்மா முக்கியக் காரணம். சச்சின் கோடிகளில் சம்பாதித்தபோதும், அவர் தன்னுடைய அரசு வேலையைத் தொடர்ந்தார். சாதாரணமாக ரயிலில் பயணம் செய்தார். அந்த குணம் சச்சினுக்கும் தொற்றிக்கொண்டது. சச்சினின் இறுதிப் போட்டியை நேரில் பார்க்க வந்திருந்த தன் அம்மாவை நோக்கி, 'என் அன்னைக்கு இந்த பாரத ரத்னா விருது சமர்ப்பணம்'' என்று சொன்னார்.

ஒழுக்கம், எளிமை, இந்தியர்களால் எதிலும் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனப் பல விஷயங்களை நமக்குச் சொல்லும் சச்சினுக்கு 'பாரத ரத்னா’ விருது வழங்குவது மிகப் பொருத்தம்.

Bharath Ratna rules and history...

நம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு இது 50-வது வருடம்!

வெண்கலத்தில், அரசமரத்தின் இலை வடிவமும் அதில் ஒரு பக்கம் பிளாட்டினத்தாலான சூரியனும் மறு பக்கம் சிங்கமும் பொறிக்கப்பட்டு, 'பாரத ரத்னா’ என்று பழங்கால தேவநகரி மொழியில் எழுதப்பட்டு இருக்கும். வெள்ளை ரிப்பனில் இணைக்கப்பட்ட இந்த விருது, ஜனாதிபதியால் அணிவிக்கப்படும்.

பாரத ரத்னா முதல் விருதைப் பெற்ற மூவர், சி.வி.ராமன், ராஜாஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

இந்தியர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று விதிமுறை கிடையாது. எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார் கான், நெல்சன் மண்டேலா ஆகியோர் பாரத ரத்னா விருதுபெற்ற வெளிநாட்டவர்கள்.

வெளிநாட்டில் பிறந்து, இந்தியப் பிரஜையான அன்னை தெரசா இந்த விருதைப் பெற்றார். பெண்களில் இந்த விருதைப் பெற்றவர்கள்... இந்திரா காந்தி, லதா மங்கேஷ்கர் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர்.

இதுவரை 43 பேர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு உள்ளது.


திரும்ப பெறப்பட்ட விருது, நேதாஜிக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா மட்டுமே. இந்த விருதைப் பெற மறுத்தவர், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத். தானே தேர்வுக் குழுவில் இருப்பதால், விருதை மறுத்துவிட்டார். எனினும் 1992-ம் வருடம், அவரின் மறைவுக்குப் பின்னர் விருது வழங்கப்பட்டது.

1966-ம் வருடத்தில் இருந்துதான் மறைந்தவர்களுக்கும் விருது வழங்கலாம் என்ற விதிமுறை இணைக்கப்பட்டது. 12 பேர்களுக்கு இறந்த பின்னர் வழங்கப்பட்டது. உயிருடன் இருக்கும்போது விருது பெற்றவர்களில் மிக  மூத்தவர் டி.கே.கார்வே. தமது 100-வது வயதில் பெற்றார். இளம் வயதில் பெறுபவர், சச்சின் டெண்டுல்கர் (40 வயது). விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கலாம் என இரண்டு வருடங்களுக்கு முன்புதான் விதிமுறை கொண்டுவரப்பட்டது. முதல் விருதைப் பெறுகிறார் சச்சின்!

பாகிஸ்தானின் மிக உயரிய 'நிஷான் இ பாகிஸ்தான்’ விருது மற்றும் 'பாரத ரத்னா’ இரண்டையும் பெற்றவர் மொரார்ஜி தேசாய்.

நெல்சன் மண்டேலா - கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்...

Posted: 19 Dec 2013 07:03 AM PST
'ஆப்ரிக்க காந்தி’ எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா, சமீபத்தில் இந்த உலகைவிட்டு விடைபெற்றாலும், நம் நெஞ்சத்தில் நிலைத்துவிட்டார். அந்த அமைதிப் புறாவுக்கு நமது அஞ்சலி.

சிறுவயதில் கழுதை, மீது சவாரி செய்துகொண்டு இருந்தார் மண்டேலா. அப்போது கழுதை அவரைக் கீழே தள்ளிவிட்டது. மண்டேலாவின் உடலில் முட்கள் குத்தி, ரத்தம் கசிந்தது. சுற்றி இருந்தவர்கள் கிண்டல்செய்து சிரித்தார்கள். ஒருவர் தோற்றால், மற்றவர்கள் எப்படிக் காயப்படுத்துவார்கள் என்பதை அப்போது உணர்ந்தார். நாம் அப்படி யாரையும் வருத்தப்படுத்தக் கூடாது என்று உறுதி எடுத்தார். அவரிடம் இருந்து நாம்         கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்...

வாழ்க்கையைக் கொண்டாடு! 

சிறுவயதில் தேனடை சேகரித்தல், மாடு மேய்க்கும்போது... சக நண்பர்களுடன்  குத்துச்சண்டை விளையாட்டு என வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார் மண்டேலா. அவரது 70-வது வயதில் நடைபெற்ற தேர்தலில் வென்றபோது,  ஜாலியாக ஒரு டான்ஸ் போட்டார்.

தோல்விக்குத் துவளாதே! 

மூன்று முறை வழக்கறிஞர் ஆக நடந்த தேர்வில் தோற்றார். பெரிதும் முயன்று, அட்டர்னி ஆனார். தோல்விகள் துரத்திய போதும் ஆப்ரிக்க பூர்வக் குடிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்கி, புகழ்பெற்றார்.

கற்றுக்கொண்டே இரு! 

தனிமைச் சிறையில் 27 ஆண்டுகள் இருந்த காலத்தில், அவரைப் பார்க்க வரும் மனைவி வின்னி மூலம் உலக நடப்புகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வார். ஷேக்ஸ்பியரின் எல்லா நூல்களையும், சர்ச்சிலின் உலகப் போர் நினைவலைகளையும் சிறையில் இருந்த சமயம் படித்து முடித்தார்.

ஊருக்கு உழைத்திடு! 

மேற்படிப்புப் படிக்க, தென் ஆப்ரிக்காவின் நகர்ப்புறம் நோக்கி வந்தார் மண்டேலா. அரசரின் மகனான அவர் மீதே எச்சில் துப்பினார்கள். கடைக்காரர்கள் பொருட்களைத் தர மறுத்தார்கள். நன்கு படித்திருந்தும் ஒரு முட்டாளைப் போல அவரை வெள்ளையர்கள் பார்த்தார்கள். இவற்றைத் 'தன்னுடைய சிக்கல்’ என்று எண்ணாமல், 'தன் சக மக்களின் சிக்கல்’ என்று எல்லாருக்காகவும் போராடினார்.

அன்பே அழகானது! 

ஜனாதிபதியாக இருந்தபோது மண்டேலா, உலகக் கோப்பை ரக்பி கால்பந்து இறுதிப் போட்டியைப் பார்வையிட வந்தார். பெரும்பான்மையினர் வெள்ளையின வீரர்கள். உற்சாகமாக தன் நாட்டின் அணியை ஊக்கப்படுத்தினார். கறுப்பின மக்கள் என்றால், வெள்ளையர்கள் இல்லாத அணியையே ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தைத் தனது அன்பால் உடைத்தார். போட்டியைக் காண வந்திருந்த 60 ஆயிரம் மக்களும் எழுந்து நின்று அவரின் பெயரை உச்சரித்தார்கள்.

தன்னலத்தைத் தவிர்! 

வாய்ப்பு இருந்தும் ஜனாதிபதி பதவியை இன்னொரு முறை ஏற்காமல் கம்பீரமாக விலகினார். அவரது சொந்த மகன் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட, அந்த வலியைத் தாங்கிக்கொண்டு, எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார் மண்டேலா.

வலிகளை வெல்! 

50 வயதுக்கு மேலே வந்த காசநோய், இறுதி வரை மண்டேலாவுக்கு இருந்தது. சிறையில் இருந்தபோது, சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் வேலைபார்த்தது, கண் பார்வையைப் பாதித்தது. புற்றுநோயும் வாட்டியது. 'நான், கேன்சரால் வெல்லப் பட்டாலும் சொர்க்கம் சென்று, அங்கே நம் கட்சி அலுவலகத்தில் என் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக்கொள்வேன்!' என்று சிரிப்புடன் சொன்னார்.

வெறுப்பை விடு! 

''எதிரிகளை வெல்ல ,அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்'' என்பார் மண்டேலா. அவர் விடுதலையானதும், நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. தொலைக்காட்சியில் தோன்றி, மக்களை அமைதிகாக்கச் செய்தார். அமைதியாகத் தேர்தலை நடத்தி, எல்லாருக்குமான அரசை அமைத்தார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! 

கறுப்பின மக்கள் அதிகமாக இருந்தபோதும் தனது அமைச்சரவையில் வெள்ளையர்கள், இஸ்லாமியர்கள், இந்தியர்கள், லிபரல்கள் என்று எல்லாரையும் இணைத்துக்கொண்டார். 'நான் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தையும் எதிர்க்கிறேன்; கறுப்பின ஆதிக்கத்தையும் நிராகரிக்கிறேன்' என்று உறுதியாகச் சொன்னார்.

இன்று புதிதாகப் பிறந்தோம்! 

27 வருட சிறை வாழ்க்கைக்குப் பின் வெளியே வந்ததை எப்படிப் பார்த்தார் தெரியுமா அவர்? 'நான் சிறைக் கதவுகளைக் கடந்து, இறுதி முறையாக நடந்தேன். 70 வயதில் எல்லாம் புதிதாக தொடங்குவதாக உணர்கிறேன். என்னுடைய 10,000 நாட்கள் சிறைவாசம் முடிந்தது. இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்.'

Saturday, January 11, 2014

நோக்கியா 106 இந்தியாவில் ரூ.1399


உயர்ரக ஸ்மார்ட் போன்களை அடிக்கடி வெளியிடும் நோக்கியா நிறுவனம், மத்திய நிலையிலும், பட்ஜெட் விலையிலும் பல மொபைல் போன்களை விற்பனைக்கு வெளியிட்டு வருகிறது. அண்மையில் இந்த வகையில் நோக்கியா 106 என்ற மொபைல் போனை ரூ.1,399 என்ற விலையில் வெளியிட்டுள்ளது. 1.8 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே தரும் திரை, தூசு படியாத கீ பேட், 4 வழிகளில் இயங்கும் நேவிகேஷன் கீ, எப்.எம்.ரேடியோ, இரண்டு பேண்ட் இயக்கம், நோக்கியா சிரீஸ் 30 ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பல அத்தியாவசிய வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் 800 mAh திறன் கொண்ட Nokia BL5CB பேட்டரி 9.9 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தக் கூடிய வசதியை அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 35 நாட்கள் மின்சக்தி தங்குகிறது.
இந்த போனின் பரிமாணம் 112.9 x 47.5 x 14.9 மிமீ. எடை 74.2 கிராம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட அலாரம் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. கருப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது.
ஏற்கனவே, இதே வரிசையில் வெளியான நோக்கியா 105 மொபைல் போனைக் காட்டிலும் சற்று பெரிய திரையினை இது கொண்டிருப்பதால், பட்ஜெட் விலையில் போனை விரும்புபவர்கள் இதனை விரும்பலாம்.

Intex AQUA 4.0 Dual SIM Android phone launched for Rs. 5490

 
ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில், அனைவரும் வாங்கக் கூடிய விலையில், இன்னும் ஒரு போனாக, இண்டெக்ஸ் அகுவா ஐ-4 வந்துள்ளது. இதன் விலை ரூ.7,600. 5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், 512 எம்.பி. ராம் நினைவகம், 4.2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, இரண்டு சிம் பயன்பாடு ஆகியவற்றுடன், சிக்கலற்ற மொபைல் பயன்பாட்டினை இது தருகிறது என இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்த ஸ்மார்ட் போனை, ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குகிறது. இதன் முதன்மை கேமரா 8 எம்.பி. திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கேமரா 1.3 எம்.பி. திறன் உடையதாக உள்ளது. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டது. இதன் மூலம் 6 மணி நேரம் தொடர்ந்து பேச இயலும். 220 மணி நேரம் மின்சக்தி தங்கும். WeChat, OLX, Matrabhasha, Intex Cloud, Intex Play மற்றும் Hungama ஆகிய அப்ளிகேஷன்கள் போனில் பதிந்தே கிடைக்கின்றன. குறைந்த விலையில், குறையாத வசதிகளுடன் கூடிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனை விரும்புபவர்கள் இந்த போன் குறித்தும் சிந்திக்கலாம்.