Saturday, January 11, 2014

நோக்கியா 106 இந்தியாவில் ரூ.1399


உயர்ரக ஸ்மார்ட் போன்களை அடிக்கடி வெளியிடும் நோக்கியா நிறுவனம், மத்திய நிலையிலும், பட்ஜெட் விலையிலும் பல மொபைல் போன்களை விற்பனைக்கு வெளியிட்டு வருகிறது. அண்மையில் இந்த வகையில் நோக்கியா 106 என்ற மொபைல் போனை ரூ.1,399 என்ற விலையில் வெளியிட்டுள்ளது. 1.8 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே தரும் திரை, தூசு படியாத கீ பேட், 4 வழிகளில் இயங்கும் நேவிகேஷன் கீ, எப்.எம்.ரேடியோ, இரண்டு பேண்ட் இயக்கம், நோக்கியா சிரீஸ் 30 ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பல அத்தியாவசிய வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் 800 mAh திறன் கொண்ட Nokia BL5CB பேட்டரி 9.9 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தக் கூடிய வசதியை அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 35 நாட்கள் மின்சக்தி தங்குகிறது.
இந்த போனின் பரிமாணம் 112.9 x 47.5 x 14.9 மிமீ. எடை 74.2 கிராம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட அலாரம் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. கருப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது.
ஏற்கனவே, இதே வரிசையில் வெளியான நோக்கியா 105 மொபைல் போனைக் காட்டிலும் சற்று பெரிய திரையினை இது கொண்டிருப்பதால், பட்ஜெட் விலையில் போனை விரும்புபவர்கள் இதனை விரும்பலாம்.

No comments:

Post a Comment