ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட்போனுக்குள் இருக்கும் புகைப்படங்கள், மொபைல் எண்கள் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய வைரஸ்களிலிருந்து பாதுகாக்க சில அப்ளிகேஷன்ஸ் உள்ளன. இவற்றில் தன் வேலையை மிகத் துரிதமாகச் செய்யக்கூடியதுதான் இந்த ஏவிஜி ஆன்டிவைரஸ் செக்யூரிட்டி என்னும் ஆப்ஸ்.
ஒரு ஆப்ஸ் அல்லது ஃபைலை பதிவிறக்கம் செய்து, அதை ஸ்மார்ட்போனுக்குள் உள்ளே நுழைக்கும்போதும், அது பாதுகாப்பானதுதானா என்பதைப் பரிசோதித்துவிட்டுதான் உள்ளே நுழைக்க இது உதவுகிறது. ஸ்மார்ட்போனில் இணையத்தைப் பயன்படுத்தித் தகவல்களைத் தேடும்போதோ அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போதோகூட ஸ்மார்ட்போன் வைரஸ்களால் பாதிக்கப்படலாம். அந்தச் சமயத்தில், நம் ஸ்மார்ட்போனில் இந்த ஆன்டிவைரஸ் இருந்தால் போனுக்கு எந்தப் பாதிப்பும் வராது.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலகம் முழுக்க 10 கோடிபேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.
கிளீன் மாஸ்டர்
இந்த ஆப்ஸ், ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தேவையில்லாத ஜங்க் ஃபைல்களைச் சுத்தம் செய்யப் பயன்படுகிறது. தேவையில்லாத ஃபைல்களை நீக்குவதன் மூலம் மெம்மரி பூஸ்டராகவும் செயல்படுகிறது.
பொதுவாக, அதிகமான ஃபைல்கள் ஸ்மார்ட்போன்களில் நிறைந்திருந்தாலே ஸ்மார்ட்போன்களின் வேகம் குறையும். வேகம் குறைவதைத் தடுக்க இதை பயன்படுத்தி மெமரியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதேசமயம், பாதுகாத்து வைத்திருக்கும் ஃபைல்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இந்த ஆப்ஸினால் உண்டாகாது.
ஹைலைட்:
இந்த ஆப்ஸை உலகம் முழுக்க 5 கோடி பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். 30 மொழிகளில் இந்த ஆப்ஸ் சப்போர்ட் செய்கிறது.
|
Monday, February 24, 2014
Avg Anti virus for smart phones
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment