Monday, February 24, 2014

திருக்குறளின் மேன்மை!


என்னிடம் ஒருவர், ஒரு திருக்குறளைக் கூறுங்கள். அந்தக் குறளைக் கூறும் பொழுது உதடுகள் ஒட்டக் கூடாது. உதடுகள் ஒட்டாமல் கூறக் கூடிய திருக்குறள் எது?" என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை. பின் அவரே கூறினார்.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

துறவு என்னும் அதிகாரத்தில் வரும் இந்தக் குறளின் பொருள் எவற்றையெல்லம் நாம் நீக்கிவிடுகிறோமோ, அவற்றிலிருந்து வரும் துன்பங்களும் நமக்கு இல்லை.

மேலும் ஒரு தகவலைக் கூறினார். உலகப் பற்றுக்களை விட்டுவிட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இறைவனிடம் பற்று வைக்கவேண்டும். இறைவன் பற்று அற்றவன் - பற்றுக்களை விட்டவன். அவனிடம் பற்று வைக்க வேண்டும். இந்தக் குறட்பாவைக் கூறும் பொழுது உதடுகள் நன்றாக ஒட்டுகின்றன.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு.

இந்தக் குறளும் ‘துறவு’ என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

இவை தற்செயலாக அமைந்ததா அல்லது திருவள்ளுவர் மிகவும் யோசித்து அமைத்தாரா என்றெல்லாம் நம்மை மிகவும் சிந்திக்க வைக்கிறதல்லவா? என்னே அய்யனின் பெருமை!

தமிழ்மணி

No comments:

Post a Comment