Sunday, January 19, 2014

சாம்சங் கேலக்ஸி எஸ்5 வெளிவருகிறது

வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் Mobile World Congress (MWC) ல் சாம்சங் காலக்ஸி எஸ்5 வெளிவர இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஸ்பெயின் நாட்டில், பார்சிலோனா நகரில், அடுத்த காலக்ஸி வரிசை வெளியாகும். Mobile World Congress அங்கு பிப்ரவரி 24-27 நடை பெற இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவின் துணைத் தலைவர், அண்மையில் கொரியாவின் சீயோல் நகரில் ஒரு பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். காலக்ஸி எஸ் 5 வடிவமைப்பில், புதிய பொருள் ஒன்று பயன்படுத்த இருப்பதாகவும், அதன் மூலம், போன் டிஸ்பிளே வளையும் தன்மை கொண்டதாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காலக்ஸி எஸ் 5 இரண்டு மாடல்களில் வரும். ஒன்று முழுவதுமாக மெட்டல் அமைப்பிலும், இன்னொன்று பிளாஸ்டிக் அமைப்பிலும் வரும். இவற்றின் விலையிலும் வேறுபாடு இருக்கும். மெட்டல் அமைப்பில் உருவாகும் போன் காலக்ஸி எப் (Samsung Galaxy F) என அழைக்கப்படலாம்.
சென்ற 2013 ஏப்ரல் மாதம் வெளியான, சாம்சங் காலக்ஸி எஸ்4, இதுவரை வெளியான ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் அதிகம் விற்பனையான போன் என்ற பெயரை எடுத்துள்ளது. அறிமுகமாகி இரண்டு மாதங்களிலேயே, 2 கோடி போன்கள் விற்பனையாயின. வேகமாக விற்பனையான போன் எனவும் பெயர் எடுத்தது. இதுவரை மொத்தம் 4 கோடி போன்கள் விற்பனையாகியுள்ளன.

No comments:

Post a Comment