Sunday, January 19, 2014

New Sony 20.7 MP camera mobile

சோனி நிறுவனம், அண்மையில் தன் எக்ஸ்பீரியா இஸட்1 மொபைல் போனை, 20.7 எம்.பி. திறன் கொண்ட கேமராவுடன் வடிவமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், ஏற்கனவே வெளியான Z1 போனைப் போன்றே வடிவமைக்கப்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் அளவில் சற்று சிறியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் Triluminos என்ற டிஸ்பிளேயுடன் இயங்கும். 2.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 800 ப்ராசசர் இணைக்கப்படும்.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன். ஒரே அலுமினிய வார்ப்பில் இதன் வெளிப்பாகம் அமைக்கப்படும். இதன் கேமரா Exmos RS sensor என்ற சென்சார் கொண்டு, 20.7 எம்.பி. திறன் கொண்டதாக இருக்கும். இன்னொரு கேமரா முன்புறமாக 2.2 எம்.பி. திறன் கொண்டிருக்கும். போனின் தடிமன் 9.4 மிமீ; எடை 140 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், 2 ஜிபி ராம் மெமரி, 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதியுடன் 16 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,300 mAh திறன் கொண்டதாக இருக்கிறது. இது முந்தைய போனில் இருந்த 3,000 mAh திறன் கொண்டது இல்லை என்பது சற்று வியப்பினைத் தருகிறது. இந்த போன் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

No comments:

Post a Comment