Sunday, January 19, 2014

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் புதிய மொபைல் போன்கள் இரண்டினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Micromax Bolt A59 மற்றும் Micromax Bolt A59 28 என இவை அழைக்கப்படுகின்றன. போல்ட் 59, ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1 சிஸ்டத்திலும், போல்ட் 28 ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டத்திலும் இயங்குகின்றன. ஏ59 போனில், 2 மெகா பிக்ஸெல் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் உடன் தரப்பட்டுள்ளது. இன்னொரு கேமராவும் முன்புறம் கிடைக்கிறது. இதன் மற்ற அம்சங்கள்:

3.5 அங்குல திரை, கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1 கிகா ஹெர்ட்ஸ் வேக இயக்கம் கொண்ட ப்ராசசர், இரண்டு சிம் பயன்பாடு, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை-பி, புளுடூத், மைக்ரோ யு.எஸ்.பி. கார்ட் ஸ்லாட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 256 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். போனின் தடிமன் 10 மிமீ ஆகும். இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது.

போல்ட் ஏ28 மேலே சொல்லப்பட்ட திரை, ப்ராசசர் கொண்டுள்ளது. இதன் இரண்டு கேமராக்களும் 0.3 எம்.பி. திறன் கொண்டவையாக உள்ளன. இதன் தடிமன் 12.5 மிமீ. எடை 89 கிராம். மேலே சொல்லப்பட்ட மெமரி சிப்கள் தரப்பட்டாலும், இதன் ஸ்டோரேஜ் மெமரியை 32 ஜிபி வரை மட்டுமே அதிகப்படுத்த முடியும். இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது.
மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 59 கிரே கலரில் வருகிறது.இதன் அதிக பட்ச விலை ரூ.4,542. போல்ட் ஏ 28 கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,674.
Click Here

No comments:

Post a Comment