இயற்கையில், ஆண்டவனின் படைப்புகள் பொதுவாக ஏழு ஏழாக இருப்பதையே கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த 'சப்தம’ என்று சொல்லப்படும் ஏழு என்ற எண் உரு தெய்வாம்சம் பொருந்தியதாகக் கருதப்படுகிறது.
முதல் படைப்புகளான ஏழு கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவை தங்கள் நீள்வட்டப் பாதையில் மிகவும் துல்லியமாக ஒரு நொடிகூடத் தவறாமல் காலம் காலமாக சுற்றிச் சுழல்கின்றன.உலகின் எல்லா நாடுகளிலும், இந்த ஏழு கிரகங்களை ஒட்டியே வாரத்துக்கு 7 நாட்கள் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று முறையாக வகுக்கப்பட்டிருக்கின்றன.இயற்கைப் பிறப்புகள் தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீரில் வாழ்வன, தாவரம் என ஏழாக அமைந்துள்ளன.இயற்கை வண்ணங்கள் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு. வானவில்லில் காட்சி தருகிற ஏழு நிறங்கள் இவை.இசையில், ச-ரி-க-ம-ப-த-நி என சப்த ஸ்வரங்கள் அமைந்துள்ளன.
அது மட்டுமா... அயோத்தி, காசி, மாயா, உஜ்ஜயினி (அவந்தி), துவாரகா, மதுரா, காஞ்சி ஆகிய ஏழு நகரங்களில் வசிப்பதும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய ஏழு நதிகளில் நீராடுவதும் புண்ணியம் நிறைந்தவை எனப் போற்றப்படுகின்றன.
சப்தரிஷிகள் என அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரஸர் ஆகியோரைக் கொண்டாடுகிறார்கள். சப்த சிரஞ்ஜீவிகளாக அஸ்வத்தாமர், மகாபலி, ஆஞ்சநேயர், வியாசர், விபீஷணர், கிருபர், பரசுராமர் ஆகிய ஏழு பேரையும் அவர்களுக்கு உரிய நாளில், வணங்கி வழிபடுகிறோம்.
|
Wednesday, January 22, 2014
Amazing 7
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment