Friday, July 5, 2013

Fastest Whatsapp




Wow Whatsapp!!!!!!



வாட்ஸ் அப் (Whatsapp) என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் அப்ளிகேஷன் புரோகிராம், ஒரே நாளில் 2,700 கோடி செய்திகளைக் கையாண்டதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ மெசேஜ் அமைப்பில், இதுவரை ஒரு நாளில் அதிக பட்சமாக நூறு கோடி செய்திகளே பரிமாறிக் கொள்ளப்பட்டன என்பதனை ஒப்பிடுகையில், வாட்ஸ் அப் அப்ளிகேஷனின் விஸ்வரூப சாதனை புரிய வரும்.
வாட்ஸ் அப் மெசேஜ் புரோகிராமில், மெசேஜ் சேவை ஒரு போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலவசமாக எஸ். எம்.எஸ். சேவை தரப்படுவதால், எஸ். எம்.எஸ். கட்டணம் அதிகமாகவுள்ள இந்தியா போன்ற நாடுகளில், இந்த சேவை அதிக பிரபலமடைந்துள்ளது. மேலும், நோக்கியா ஆஷா போன்ற, ஸ்மார்ட் போன் அல்லாத மொபைல் போன்களிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இது போன்ற வசதிகளால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 1,800 கோடி மெசேஜ்களைக் கையாண்ட வாட்ஸ் அப் அப்ளிகேஷன், தற்போது 2,700 கோடிக்குத் தாவியுள்ளது. எந்த இணைய சேவையும் இது போல திடீரென உயர்ந்த நிலையை அடைந்ததில்லை.

No comments:

Post a Comment