மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 ஏ210
இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மைக்ரோமேக்ஸ்
நிறுவனத்தின், கேன்வாஸ் வரிசை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் மிகவும்
பிரபலமாகி வருகின்றன. அந்த வரிசையில் வந்துள்ளது கேன்வாஸ் 4 ஏ 210. 1280 x
720 பிக்ஸெல் திறனுடன் கூடிய டிஸ்பிளே தரும் 5 அங்குல திரை. ஐ.பி.எஸ்.
பேனல் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், காட்சியின் தன்மையும், வண்ணக்
கலவையும் சிறப்பாக உள்ளது.
2000 mAh திறன் கொண்ட பேட்டரி 220 மணி நேரம்
மின் சக்தியைத் தங்க வைக்கிறது. 480 நிமிடம் பேச முடிகிறது. இதன் பரிமாணம்
144.5x 73.8x 8.9 மிமீ. எடை 158 கிராம். வடிவம் பார் டைப்பில் உள்ளது.
இரண்டு சிம்களை இயக்கும் இந்த போன், கிரே மற்றும் வெள்ளை கலரில்
கிடைக்கிறது. 13 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா 4208x 3120 பிக்ஸெல்களில்
படம் தருகிறது. ஸூம், பிளாஷ் கிடைக்கிறது. இரண்டாவது கேமராவும்
தரப்பட்டுள்ளது. புளுடூத், வை-பி மற்றும் யு.எஸ்.பி. இணைப்புகள் நெட்வொர்க்
செயல்பாட்டினை எளிதாக்குகின்றன. ஜி.பி.எஸ்., ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி
ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. இணைய தேடலுக்கு ஆண்ட்ராய்ட்
வெப்கிட் கிடைக்கிறது. ஆடியோ, வீடியோ, எப்.எம். ரேடியோ இயங்குகின்றன. 3.5
மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கிறது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. எஸ்.எம்.எஸ்.,
எம்.எம்.எஸ்., மற்றும் மின் அஞ்சல் வசதிகள் உள்ளன. ஆண்ட்ராய்ட் 4.1.2
ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.
இந்த போனின் அதிக பட்ச விலை ரூ. 17,999.
No comments:
Post a Comment