Friday, July 19, 2013

Nokia 3g Phones

 நோக்கியாவின் 3ஜி போன்கள்


நோக்கியா, புதியதாக, மூன்று போன்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் 3ஜி தொடக்க நிலை விலை கொண்டுள்ள போன்களாகும். நோக்கியா 207, 208 மற்றும் 208 டூயல் சிம் என இவை பெயரிடப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் 2.4 அங்குல அகலத்தில் திரை உள்ளது. நோக்கியா சிரீஸ் 40 எஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.
Facebook, Twitter மற்றும் Whats App ஆகியவற்றிற்கு நேரடி லிங்க் கொண்டுள்ளன. அனைத்து போன்களிலும் மைக்ரோ சிம் கார்ட்களைப் பயன்படுத்தலாம். 3G, GPRS/EDGE ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில் சார்ஜ் செய்வதற்கும், பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைப்பதற்கும் மைக்ரோ யு.எஸ்.பி.போர்ட் தரப்பட்டுள்ளது. இந்த போன்களின் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை உயர்த்தலாம்.
நோக்கியா 208 மற்றும் 208 டூயல் சிம் ஆகிய இரண்டிலும் 1.3 பின்புறக் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாடல்களிலும், 1020 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். வரும் அக்டோபரில் இவை விற்பனைக்கு வரும். இவற்றின் விலை ரூ.4,000 என்ற அளவில் இருக்கலாம்

No comments:

Post a Comment