Sunday, July 7, 2013

Space Garden!!!


விண்வெளியில் தோட்டம்


சிங்கப்பூரில் உச்சி மாடியில் தோட்டம், மாடி களுக்கிடையில் தோட்டம், பல தளங்கள் உள்ள மாடியில், தளங்களுக்கு இடையில் தோட்டங்கள் அமைக்கின்றனர்.சீனாவில் இன்னும் பல படி மேலே போய், விண்வெளியிலேயே தாட்டம் அமைக்கின்றனர். விண்வெளி வீரர்களுக்கு உணவுத் தேவையை சமாளிக்க, விண்வெளி ஆய்வுத் துறையில் பலவித ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில் ஒரு கட்டமாக இந்த விண்வெளித் தோட்ட முயற்சி உள்ளது.இச்சோதனையின் போது கட்டுப்படுத்தப்பட்ட ஓர் அறையில் காய்கறிகள் வளர்க்கப்பட்டன. விண்வெளி வீரர்கள் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு, செடிகள் ஆக்சிஜனைத் தந்தன. செடிகளும் தொடர்ந்து வளர்ந்தன. இந்த முறை பரவலானால் விண்வெளி வீரர்களின் உணவுப் பிரச்னை தீர நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன.விண்வெளி வீரர்கள், ஆண்டுக்கணக்கில் கூட விண்வெளியில் இருந்து ஆய்வுகளை நடத்த முடியும்.


No comments:

Post a Comment