Friday, July 19, 2013

galaxy s4 mini review

கேலக்ஸி எஸ்4 மினி இந்தியாவில் விற்பனை...
அண்மையில், மும்பையில் கேலக்ஸி எஸ் 4 மினி மாடல் போனை சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எஸ் 4 மினி மாடலில், திரை 4.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. 960X540 பிக்ஸெல்களுடன் AMOLED டிஸ்பிளே உள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 8 எம்.பி. பின்புறக் கேமரா, 1.9 மெகா பிக்ஸெல் முன்புறக் கேமரா, 1 ஜிபி ராம் நினைவகம்,64 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய 8 ஜி பி ஸ்டோரேஜ் மெமரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் தடிமன் 8.97 மிமீ. எடை 107 கிராம். கேலக்ஸி எஸ் 4 போனில் உள்ள Sound&Shot, S Travel, Story Album, S Translator, Watch ON மற்றும் S Health ஆகியவை இதிலும் உள்ளன. Watch ON வசதி மூலம் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் ரிமோட் கண்ட்ரோலாக மொபைல் போனைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பேட்டரி 1,900 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 27,990 என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வாங்குவோருக்கு, மூன்று மாதங்களுக்கு 2 ஜிபி, 3ஜி டேட்டா இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment