Friday, June 13, 2014

42,000 வருடம் பழைமையான மமத்

முற்றாக அழிந்துபோன அடர்ந்த உரோமத்துடனான மமத் என்று அழைக்கப்படும் யானைக் குட்டியொன்றின் முழுமையான உடல் ரஷ்யாவின் சைபீரியா பனிக்கட்டி பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது 42,000 வருடங்களாக பனிக்கட்டியின் கீழ் மறைந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இம்மமத் குட்டியானது 85 செ.மீற்றர் உயரமும் 130 செ.மீற்றர் நீளம் உடையதாக காணப்படுகின்றது.

யூரி ஹீடி என்பவரும் அவரது மகன்மாரும் விறகு சேகரிப்பதற்காக யூரிபெய் ஆற்றிற்கு அருகில் சென்றபோது இந்த மமத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இது சுமார் 42,000 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன ஒன்றரை மாதங்கள் நிறம்பிய மமத் குட்டி என்று ஆயாவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மமத்திற்கு லையுவா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது எதிர்வரும்  23ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை மமத்ஸ் என்ற சிறப்பு அருங்காட்சியொன்றில்; மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டவுள்ளது.

No comments:

Post a Comment