சில அக்ஸஸ் பைல்களை ரகசியம் காக்க பாஸ்வேர்ட் கொடுத்து யாரும் பார்க்க முடியாதது போல செய்திருப்பார்கள். அதை நாம் திறந்து பார்க்க முற்பட்டால் மைக்ரோசாப்ட் அனுமதிக்காது. அந்த பைல்கள் ஒபன் ஆகாது. ஆனால் அதை திறக்க ஒரு சாப்ட்வேர் இருக்கிறது. அதனை பயன்படுத்தினால் எந்த அக்ஸஸ் பைல்களையும் சுலபமாக திறந்து விடலாம். கீழே உள்ள முகவரியில் இருந்து அந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
டவுன்லோட் செய்யப்பட்ட பைலை திறந்து அதன் Application Exe File ஐ நேரடியாக இயக்கலாம். இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. அதன் பின்பு கீழே உள்ளது போல Access PassView என்று ஒரு பைல் திறக்கும்.
பின் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து வைத்திருக்கும் பைலை சுலபமாக இழுத்துக் கொண்டு வந்து விட்டாலே போதும். அந்த பைலுக்கான பாஸ்வேர்ட் கிடைத்துவிடும். இதனால் சுலபமாக பாஸ்வேர்ட் கொடுத்து முடக்கி வைத்துள்ள பைல்களை சுலபமாக பார்த்து விடலாம். அடிக்கடி பாஸ்வேர்ட்டை மறந்து விடுபவர்களுக்கு இது ஒரு சுலபமான வழி. இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்யுங்கள். http://www.nirsoft.net/utils/accesspv.html
No comments:
Post a Comment