Tuesday, June 24, 2014

தேனியில் 'மரணக்கிணறு


2014 
00:22
தேனி நேரு சிலையில் இருந்து போடி விலக்கு வரையிலான ரோட்டை போலீசார் 'மரணக்கிணறு' என மதிப்பீடு செய்துள்ளனர். இந்த ரோட்டில் விபத்துக்கள் நடக்கின்றன. இந்த ரோட்டில் போலீசார் கண்காணிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.நேற்று காலை பிளஸ் 1 மாணவர்கள் மூவர், ஒரே டூவீலரில் போடியில் இருந்து க.விலக்கு செல்வதற்காக இந்த ரோட்டில் சென்றனர். நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் எஸ்.ஐ., பவுன்ராஜ், இவர்களை மடக்கினார். ''எதற்காக விதியை மீறி இத்தனை பேர் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள்?'' எனக் கேட்டார். அதற்கு அவர்கள், 'தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க வேகமாக செல்கிறோம்' என்றனர்.

''இவ்வளவு வேகமாக சென்றால் உங்களை பார்க்க மற்றவர்கள் வர வேண்டியிருக்கும்; ஒரே டூவீலரில் மூவர் பயணிப்பது தவறு,'' என அறிவுறுத்திய எஸ்.ஐ., பவுன்ராஜ், மாணவர்களை ஒரு கி.மீ., ஓடச்சொன்னார்; பின், நின்ற இடத்திலேயே குதிக்கச் சொன்னார்.அவர்கள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் பஸ்சில் செல்ல பணத்தையும் கொடுத்து அனுப்பினார்.

எஸ்.ஐ., பவுன்ராஜ் கூறியதாவது: பிளஸ் 1 படிக்கும் மாணவர்களிடம் ஆபத்தை உணராமல் டூவீலரைகொடுத்து அனுப்பி விடுகின்றனர். அவர்களுக்கு தண்டனைத்தொகை விதித்து கோர்ட்டிற்கு இழுத்தால், கல்வி பாதிக்கும். தவறை நினைவில் நிறுத்தவும், அடுத்து தவறு செய்யாத வகையில் அவர்கள் மனதில் பதிய வைக்கவும், இதுபோன்ற தண்டனை கொடுத்தோம், என்றார்.

No comments:

Post a Comment