Tuesday, June 24, 2014

How to compare housing loan interest rate?

வீட்டுக் கடன் வாங்கும்போது, அதற்கான வட்டி எவ்வளவு என்பதை ஒரு வங்கிக்கு பல வங்கிகளில் விசாரித்துதான் வாங்குவோம். ஏனெனில், கடனுக்கான வட்டிவிகிதம் 0.5% குறைவாக இருந்தால்கூட, நீண்ட காலத்தில் சில லட்சம் ரூபாய்  மிச்சமாகும்.

வீட்டுக் கடனுக்கான வட்டி விகித  சதவிகிதத்தைக் கவனிக்கும் அதேநேரத்தில், அது மாறுபடும் வட்டி விகிதமா, நிலையான வட்டி விகிதமா என்பதையும் பார்ப்பது அவசியம். இந்த இரண்டில் எந்த வட்டி விகிதம் சிறப்பாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

மாறும் வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் ரேட்), ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்போது கடனுக்கான வட்டி உயர்த்தப்படும். இதேபோல், வட்டி விகிதம் குறைக்கப் படும்போது கடனுக்கான வட்டி குறையும்.

நிலையான வட்டி விகிதம் (ஃபிக்ஸட் ரேட்) என்பது கடன் வாங்கும் தேதியில் எந்த வட்டி விகிதம் இருக்கிறதோ, அது அப்படியே சில ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதாவது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினாலும், குறைத்தாலும் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதம் குறிப்பிட்ட காலத்துக்கு அப்படியே இருக்கும்.



வீட்டுக் கடன் போன்ற பெரிய கடனை வாழ்க்கையில் ஓரிரு முறைதான் வாங்குவோம். இதை வாங்குவதற்குமுன், எந்தவிதமான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது என்பதை யோசித்து முடிவெடுப்பது நல்லது. ஒருமுறை சரியாக முடிவெடுத்துவிட்டால், பிற்பாடு அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை அல்லவா!

No comments:

Post a Comment