Friday, December 13, 2013

எந்த ஏரியா காஸ்ட்லி?


கோயம்புத்தூர்னாலே "காஸ்ட்லி சிட்டி' என்பது ஊரறிந்த விஷயம்; அதிலும் "ரிச்' ஆன ஏரியா எதுவாயிருக்கும் என்று தெரிந்து கொள்ள எல்லோருக்கும் ஆசை இருக்கும். கோவையின் இதயப் பகுதியாகக் கருதப்படும் ரேஸ்கோர்ஸ் பகுதி, குடியிருப்புப் பகுதிகளிலேயே மதிப்பு மிக்க பகுதியாக இன்று வரை கோவைவாசிகளால் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பகுதியில்தான், கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், ஐ.ஜி., மாநகர காவல்துறை கமிஷனர், மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள், பெரும் தொழிலதிபர்களின் இல்லங்கள் அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இந்தப் பகுதியும் வணிக மயமாகி வருவது வேதனைக்குரிய உண்மை.
ஒரு காலத்தில் உயர்ந்த இடமாகக் கருதப்பட்ட இந்தப் பகுதி, விரைவில் அமலுக்கு வரவுள்ள வழி காட்டி மதிப்பில், கொஞ்சம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களின் கருத்தைப் பெறுவதற்காக, இணையதளத்தில் பதிவுத்துறை 
வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டி பதிவேட்டின்படி, கோவையின் "காஸ்ட்லி ஏரியா'க்களாக கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இதற்குக் காரணம், இந்த வீதிகளில் இடம் எதுவும் காலியாக இல்லை என்பதுதான். இந்தப் பகுதிகளில், ஒரு சதுரடி 13 ஆயிரம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரேஸ்கோர்ஸ், பெரியகடை வீதி, ஸ்டேட் பாங்க் ரோடு ஆகிய இடங்களில் சதுரடி 10 ஆயிரமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, நஞ்சப்பா ரோடு, நூறடி ரோடு ஆகிய பகுதிகள், இதற்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. குனியமுத்தூர் ஆதிசக்தி நகர் (சதுரடி 300 ரூபாய்), குறிச்சி அண்ணாபுரம் (சதுரடி 350 ரூபாய்) போன்ற புறநகர் பகுதிகள், விலை மதிப்பு குறைந்த இடங்களாக உள்ளன. இதனை விட விலை குறைவாக, ஆனால் பதிவு செய்யப்படாத பல இடங்களும் இருக்கின்றன.

No comments:

Post a Comment